வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து லீக்கானதா கொரோனா?.. நடந்தது என்ன?
வாஷிங்டன்: உலகளவில் ஏராளமானோரை கொன்று குவித்த கொரோனா வைரஸ் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா கருதுகிறது.
Recommended Video
கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது. அதில் பலியானோர் எண்ணிக்கை 1.54 லட்சமாக உள்ளது. இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.
அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகளவில் பலரை பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் சீனாவால் வேண்டுமென்றே பரப்பப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

வுகான்
கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து அறிந்து கொள்ள கடந்த ஜனவரி மாதம் வுகானில் உள்ள வைரஸ் பரிசோதனை கூடத்திற்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கு கொரோனா வவ்வாலிலிருந்து பரவியதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வந்ததாகவும் ஆய்வு நடத்த போதிய ஊழியர்கள் இல்லை என்றும் தெரிவித்தனர்.

வவ்வால்
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில் சீன அரசு ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வுகளால் இந்த வைரஸ் லீக்காகியிருக்கலாம் என்பது குறித்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் அந்த வைரஸ் ஒருவகையான வவ்வால் மூலம் பரவியதாக சீனா கூறுகிறது. ஆனால் அந்த பகுதியில் அந்த வகையான வவ்வால் இல்லை. அது வுகானிலிருந்து 40 மைல்களுக்கு அப்பால் உள்ளது. அது போல் சீனாவின் வெட் மார்க்கெட்டிலும் அந்த வவ்வால் விற்பனை செய்யப்படவில்லை.

பரிசோதனை கூடம்
புதிது புதிதாக என்னென்னவோ நடக்கின்றன. அந்த வைரஸ் எங்கிருந்து வந்தாலும், சீனாவிலிருந்து எந்த ரூபத்தில் வந்தாலும் அதனால் 184 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வுகானில் உள்ள அந்த பரிசோதனை கூடத்திற்கான அனுமதியை அமெரிக்கா விரைந்து ரத்து செய்யும். அந்த பரிசோதனை கூடத்திற்கு முன்னாள் அதிபர் ஒபாமா 3.7 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்திருந்தார் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும் வுகான் வைராலஜி ஆய்வகத்தில் அமெரிக்க நிபுணர்களை கொண்டு வைரஸ் தொடங்கியது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு சீன அரசை கேட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பயோ வெப்பன்
பாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கொரோனா வைரஸ் வுகான் பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து உளவுத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் அந்த பரிசோதனை கூடம் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள். மேலும் சீனா இந்த வைரஸை உயிர் ஆயுதமாக (Bio Weapon) உருவாக்கவில்லை. ஆனால் அமெரிக்க இது போன்ற வைரஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த துறையில் தாங்களும் ஜாம்பவான்கள் எஎன்பதை நிரூபிக்கவே இந்த வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டதாக கூறுகிறார்கள் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications