போனை போட்டு மெரட்டி வுட்டேன்..ஆடி போய்ட்டாங்க! உலகமே பார்க்க பாக்., பிரதமரை அசிங்கப்படுத்திய டிரம்ப்
வாஷிங்டன்: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என பலமுறை கூறிவிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஆனால் இந்தியா அதனை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், போரை நிறுத்தாவிட்டால் 200% வரி விதிப்பேன் என தான் எச்சரித்ததாகவும், இதை அடுத்து இரண்டு நாடுகளில் ஒரு நாடு 200% வரி விதிக்க 'வேண்டாம் வேண்டாம்' என கேட்டதாகவும், மேலும் தன்னிடம் கெஞ்சிய அந்த நாடு எது என சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார் டிரம்ப். குறிப்பாக இந்த நிகழ்வை மோடி பார்த்துக்கொண்டிருக்கலாம் என சொன்ன டிரம்ப், பாக்., பிரதமரை எழுந்து நிற்க வைத்தார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட போது இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை இணைந்து துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத மையங்களை அழித்தது.
இதற்கு பாகிஸ்தான் எதிர்மறையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்திய ராணுவம் அதை வெற்றிகரமாக தடுத்தது. இந்நிலையில் கடந்த மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இரு நாட்டு அதிகாரிகளும் கூறினர்.

இந்தியா பாகிஸ்தான் மோதல்
ஆனால் அதற்கு முன்னதாகவே இது நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். மேலும், அமெரிக்கா - பாகிஸ்தான் இடையிலான பதட்டங்களை நிறுத்துவதில் அமெரிக்கா முக்கிய பங்காற்றியதாக அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். இதனையடுத்து இந்தியாவிலுள்ள எதிர்க் கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பின.
பிரதமர் நரேந்திர மோடி
இருந்த போதும் போர் நிறுத்தத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பிரதமர் நரேந்திர மோடியும் தெள்ளத் தெளிவாக சொல்லி இருந்தனர்.ஆனாலும் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதுவரை கிட்டத்தட்ட 100 முறை டிரம்ப் தான் தான் போரை நிறுத்தினேன் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் பேச்சு
இந்நிலையில், இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் போரை வரிவிதிப்பை காட்டி தான் நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம் அடித்துள்ளார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் போர்ட் ஆஃப் பீஸ் எனப்படும் அமைதிவாரிய அமைப்பின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் ட்ரம்ப்," போர்ட் ஆஃப் பீஸ் நிகழ்வு குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன். இதனால் அவர் உற்சாகமடைந்தார். எனக்கு தெரிந்து இந்த நிகழ்வை அவர் பார்த்துக் கொண்டிருப்பார். இதில் இந்தியா பாகிஸ்தான் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ( அப்போது அவர்களை டிரம்ப் எழுந்து நிற்கச் சொல்ல, எழுந்து நின்றார் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்)
இந்தியா பாகிஸ்தான்
இரு நாடுகளும் அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தகத்தை செய்து வருகின்றன. பிரதமர் மோடியை பற்றி எனக்கு நன்கு தெரியும். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் குறித்து கொஞ்சம் மட்டுமே தெரியும். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஒரு சிறந்த வாரியர். செய்தித்தாள்களில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் குறித்து படித்து தெரிந்து கொண்டேன். அப்போது போர் மிகவும் உக்கிரமாக நடந்து கொண்டது. விலை உயர்ந்த 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதற்கிடையே நான் அவர்களிடம் பேசினேன். ஒரு நாடுகளும் எங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாது என சொன்னதும் வேண்டாம் என்றார்கள். போரை தொடர்ந்தால் 200% வரிவிதிப்பேன் என எனது நிலைப்பாட்டை தெரிவித்தேன்.
வரி எச்சரிக்கை
அப்போது அவர்களில் ஒருவர் அப்படி செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனால் அது யார் என இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. அதன் பின்னர் தாக்குதல் சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. சண்டை போடுவதில் அவர்கள் உறுதியாக இருந்தாலும் நிதி இழப்பு ஏற்படும் என்பதால் போர் முடிவிலிருந்து பின் வாங்கினார்கள். அணு ஆயுதம் பலம் பெற்ற இரண்டு தேசங்களும் பேசி முடிக்கப்பட்ட பின்னர் போரை நிறுத்திக் கொண்டனர், இதற்காக நான் பெருமை கொள்கிறேன்" என்றார். இந்த நிகழ்வில் இந்திய பிரதிநிதியும் கலந்து கொண்டிருந்த நிலையில் ட்ரம்பின் பேச்சுக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications