Donald Trump: டிரம்ப் மானத்தை வாங்கிய போராட்டக்காரர்கள்.. அமெரிக்காவில் பொது வெளியில் ஓடிய எப்ஸ்டீன் ஃபைல்ஸ்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் டிரம்ப் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள ஒரு ஹோட்டல் கட்டிடத்தின் மீது எப்ஸ்டீன் கோப்புகளை போராட்டக்காரர்கள் ஒளிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்தை மீண்டும் கிளறும் வகையில் போராட்டக்காரர்கள் இதனை ஒளிபரப்பியதாக தெரிகிறது.
டிரம்புடன் தொடர்புடைய எப்ஸ்டீன் கோப்புகளை வீடியோவாக போராட்டக்காரர்கள் பொதுவெளியில் திரையிட்டுள்ளனர். 2 நிமிடங்கள் 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், 'வீடியோ கிளிப்கள், புகைப்படங்கள் மற்றும் எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள சில இமேஜ்கள்' ஒளிபரப்பப்பட்டன.

டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஊடக நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்கிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியை டிரம்ப் புறக்கணித்து இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக கலந்து கொள்ள உள்ளார்.
அமெரிக்க ஊடகங்களை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வரக்கூடிய சூழலில், டிரம்ப் இதில் பங்கேற்க இருப்பது கவனம் பெற்றுள்ளது. டிரம்ப் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் சூழலில், தற்போது வாஷிங்டன் நகரில் போராட்டக்காரர்கள் டிரம்புடன் தொடர்புடைய எப்ஸ்டீன் கோப்புகளை பொதுவெளியில் திரையிட்ட சம்பவம் அமெரிக்காவில் பேசு பொருளாகியுள்ளது. வாஷிங்டன் ஹில்டன் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இந்த காட்சிகளை ஒளிபரப்பினர்.
2 நிமிட வீடியோ
எப்ஸ்டீனுடன் டிரம்ப் உரையாடும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் முடிவில், டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இணைந்து உள்ள புகைப்படத்துடன் "END THE COVER-UP" என்ற வாசகம் காட்டப்பட்டது. இரண்டு நிமிடங்கள் 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், 'வீடியோ கிளிப்கள், புகைப்படங்கள் மற்றும் எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள சில இமேஜ்கள்' ஒளிபரப்பப்பட்டன.
கடந்த 2019 ஆம் ஆண்டு எழுத்தாளர் மைக்கேல் வால்ஃப்பிற்கு எப்ஸ்டீன் எழுதிய மின்னஞ்சலும் அதில் இடம் பெற்றது. டிரம்பை குரைக்காத நாய் என்று குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவை ஒளிபரப்பியது யார் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், வாஷிங்டன்னில் நடைபெறக்கூடிய டின்னர் நிகழ்ச்சிக்கு முன்பாக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடைபெற்றதாக தெரிகிறது.
சமீப காலமாக எப்ஸ்டீன் விவகாரம் மெல்ல மெல்ல மறைந்து வரும் நிலையில், வீடியோவாக பொதுவெளியில் போராட்டக்காரர்கள் ஒளிபரப்பியது மீண்டும் எப்ஸ்டீன் விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications