Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போருக்கு தயாரான டிரம்ப்? அமெரிக்காவுடன் கிரீன்லாந்தை இணைக்க திட்டம்.. பதிலடிக்கு ரெடியான நேட்டோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது. டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டொனால்ட் டிரம்ப் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கிரீன்லாந்தில் இன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் கடும் வார்னிங்கை கொடுத்துள்ளார். இதனால் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நேரடி போருக்கு தயாராகி வருகிறது என்று கூறப்படுகிறது.இந்த போர் நடக்கும்பட்சத்தில் நேட்டோ நாடுகள் அமெரிக்காவை தாக்கும் என்பதால் கடும் பதற்றம் உருவாகி உள்ளது.

கிரீன்லாந்து.. டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள சுயாட்சி பிரதேசமாகும். இதனை ஆங்கிலத்தில் Autonomous Territory என்பார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் டென்மார்க் நாட்டில் உள்ள கிரீன்லாந்து சுயாட்சி அதிகாரம் கொண்டது. கிரீன்லாந்துக்கு என்று தனி பிரதமர் இருப்பார்.

donald trump greenland us

இதில் டென்மார்க்கால் தலையிட முடியாது. மாறாக பொருளாதாரம் சார்ந்த வகையில் கிரீன்லாந்துக்கு டென்மார்க் உதவி செய்து வருவதும், கிரீன்லாந்து தனி நாடாக இன்றி டென்மார்க்கின் ஒருபகுதியாக இன்றளவும் இருப்பதை தான் இது குறிக்கிறது. டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

டென்மார்க், கிரீன்லாந்து ஆகியவற்றுடன் அமெரிக்க எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும் கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இருந்து இப்போது வரை கிரீன்லாந்தை, அமெரிக்கா கைப்பற்றும் எனவும், கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவுடன் இணைய விரும்புவதாகவும் டிரம்ப் கூறி வருகிறார். சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு குழுவில் பேசினார்.

அப்போது அவர், ‛‛கிரீன்லாந்து மக்களுக்கு ஒரு நற்செய்தியை சொல்கிறேன். கிரீன்லாந்து மக்களின் நல்ல எதிர்காலத்துக்கு நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறோம். நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு உங்களை பணக்காரர்களாக மாற்றுகிறோம். கிரீன்லாந்து எங்களுடன் இணைய வேண்டும். அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வேண்டும். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு மட்டுமின்றி சர்வதேச பாதுகாப்புக்கும் கிரீன்லாந்து வேண்டும். நிச்சயம் கிரீன்லாந்தை பெறுவோம். '' என்று உறுதியளித்து இருந்தார்.

இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப் தனது TRUTH சமூக வலைதளத்தில் கிரீன்லாந்துக்கு புதிய மிரட்டலை விடுத்துள்ளார். அதில் டொனால்ட் டிரம்ப், ‛‛அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டு குழுவில் உரையாற்றியபோது ஒன்றை உறுதியாக கூறியிருந்தேன். கிரீன்லாந்து மக்களின் எதிர்காலத்துக்காக முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்து இருந்தேன். 2ம் உலகப்போரில் இருந்து கிரீன்லாந்தை பாதுகாப்பாக வைத்திருப்பது போல் இனியும் அதற்கான உறுதியை தருவதாக கூறியிருந்தேன்.

கிரீன்லாந்தில் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலரை முதலீடு செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி பணக்காரர்களாக மாற்ற தயாராக இருக்கிறேன். இதனால் அமெரிக்காவை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உலகின் பெரிய நாடாக உள்ள அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார். இது கிரீன்லாந்துக்கு, டொனால்ட் டிரம்ப் கொடுத்த மிரட்டல் மற்றும் இறுதி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அதாவது போர் தொடுப்பதற்கு முன்பே அமெரிக்காவுடன் இணைந்து விடுங்கள் என்று மறைமுகமாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கிரீன்லாந்தை பொறுத்தவரை இன்று நாடாளுமன்ற தேர்தல் என்பது நடைபெற உள்ளது. மொத்தம் 31 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை பிடிக்கும். கிரீன்லாந்தில் இங்கு பல கட்சிகள் இருந்தாலும் 2 கட்சிகள் தான் பெரிய கட்சிகளாக உள்ளன. ஒன்று Inuit Ataqatigiit. இது இப்போது கிரீன்லாந்தில் ஆளும் கட்சியாக உள்ளது. இதன் தலைவர் பவுரூப் எகேட் தான் பிரதமராக உள்ளார். மற்றொரு கட்சியின் பெயர் Siumut. இவர்கள் 2 பேரும் கூட்டணி அமைத்து ஆட்சியை கடத்தி வருகின்றன.

டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் வேளையில் இருகட்சிகளும் அந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தில் உள்ளன. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். தேர்தலுக்கு பிறகும் இது நடக்கும் பட்சத்தில் டொனால்ட் டிரம்ப் மாற்று யோசனையை கையில் எடுப்பார்.

அதன்படி நேரடியாக கிரீன்லாந்தை கைப்பற்ற டொனால்ட் டிரம்ப் அங்கு போரை தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாகவும், கடைசி வார்னிங்காகவும் தான் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுடன் இணைந்து விடுங்கள் என்று கிரீன்லாந்துக்கு ட்ரூட் வலைதளம் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா போர் தொடுத்தால் அது பெரிய போராக மாறலாம்.

ஏனென்றால் கிரீன்லாந்தை உள்ளடக்கிய டென்மார்க் நாடு என்பது நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. நேட்டோவில் மொத்தம் 29 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் அமெரிக்காவும் ஒன்று. ஆனால் நேட்டோவில் இருந்து அமெரிக்கா வெளியேற உள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இப்படியான சூழலில் அமெரிக்க டென்மார்க்கின் கிரீன்லாந்தில் போர் தொடுத்தால் நிச்சயம் நேட்டோ உறுப்பு நாடுகள் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும். ஏனென்றால் நேட்டோவின் விதியின்படி அதில் உறுப்பினராக உள்ள நாட்டின் மீது யாராவது போர் தொடுத்தால் நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து பதிலடி கொடுக்க வேண்டும். உதவி செய்ய வேண்டும் என்பது விதியாக உள்ளது. இதனால் அமெரிக்கா கிரீன்லாந்து மீது போரை தொடங்கும் பட்சத்தில் அது ஐரோப்பா - அமெரிக்கா இடையேயான போராக மாறலாம்.

ஏனென்றால் நேட்டோவில் ஐரோப்பிய நாடுகள் தான் அதிகம் உள்ளன. ஏற்கனவே உக்ரைன் மீதான ரஷ்யா போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் தனிதனி அணிகளாக மாறி உள்ளன. நிலைமை இப்படி இருக்கும்போது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா கிரீன்லாந்தில் போரை தொடங்கினால் நேட்டோ நாடுகளால் அது நிச்சயம் அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் இடையேயான போராக உருவாகும் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+