அணுஆயுதத்தை கையிலெடுத்த அமெரிக்கா.. அவசர உத்தரவிட்ட டொனால்ட் டிரம்ப்.. ரஷ்யாவால் டென்ஷன்.. பின்னணி
வாஷிங்டன்: 1992ம் ஆண்டுக்கு பிறகு 33 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா மீண்டும் அணுஆயுதத்தை கையில் எடுக்கிறது. இதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக பிறப்பித்துள்ளார். அதன்படி மீண்டும் அணுஆயுத சோதனையை உடனடியாக தொடங்கும்படி டிரம்ப் கூறியுள்ளார். டிரம்பின் இந்த உத்தரவுக்கு பின்னணியில் ரஷ்யா இருப்பதாக கூறப்படும் நிலையில் பெரிய போர் வெடிக்கிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். இவர் தடாலடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவு மொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளது.

அதாவது டொனால்ட் டிரம்ப் இன்று திடீரென்று ‛பெண்டகனுக்கு' அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். ‛பென்டகன்' என்பது அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அலுவலகமாகும். அமெரிக்காவின் போர் திட்டங்கள் உள்ளிட்டவை இந்த அலுவலகத்தில் தான் முன்னெடுக்கப்படும்.
இந்நிலையில் தான் சமீபத்தில் பாதுகாப்பு துறையின் பெயரை போர் துறை என்று டிரம்ப் மாற்றினார். இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் இன்று அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது மீண்டும் அணுஆயுத சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில், ‛‛மற்ற நாடுகள் அணுஆயுத திட்டங்களை சோதித்து பார்க்கின்றன. இதனால் அந்த நாடுகளை போல் அதற்கு சமமான அணுஆயுதங்களை சோதிக்க போர் துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன். இந்த நடவடிக்கை உடனடியாக தொடங்கும்'' என்று கூறியிருந்தார்.
மேலும் இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து டிரம்ப் பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் பற்றி பேசப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அணுஆயுத சோதனைக்கான உத்தரவு குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது டிரம்ப், ‛‛இந்த சோதனை என்பது மற்ற நாடுகளுடன் தொடர்புடையது. ஏனென்றால் மற்ற நாடுகள் அணுஆயுத சோதனைகளை செய்கின்றன. இதனால் நாங்களும் அணுஆயுத சோதனையை செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்'' என்றார். அதாவது ரஷ்யா சமீபத்தில் அணுஆயுத சோதனையை மேற்கொண்டது. இதனால் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் இந்த உத்தரவுக்கு பின்னணியில் ரஷ்யா மீதான கோபம் தான் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ரஷ்யா - உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இந்த போரை நிறுத்த டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார். ஆனால் போரை அவரால் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இதனால் வழக்கம்போல் உக்ரைனுக்கு, அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது.
இதனால் கோபமான ரஷ்யா, அணுஆயுத சோதனையை தொடங்கி உள்ளது. நேற்றைய தினம் ரஷ்யா போசிடான் அணுசக்தி சூப்பர் டார்பிடோ என்ற நீர்மூழ்கி கப்பலை (Poseidon nuclear-powered super torpedo) பரிசோதனை செய்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் டிரம்ப் இன்று அணுஆயுத சோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ‛‛முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலின் ஏவுகணை இயந்திரத்தில் இருந்து ஏவுகணை ஏவியது மட்டுமின்றி, அதன் அணுஆயுத யூனிட்டையும் சேர்த்து ஏவி பார்த்தோம்'' என்று கூறியிருந்தார். அதற்கு முன்பாக கடந்த 21ம் தேதி ரஷ்யா பியூரெவஸ்ட்னிக் அணுசக்தி ஏவுகணையை சோதித்தது.
இப்படி ரஷ்யாவின் தொடர் சோதனைகள் டிரம்பை டென்ஷனாக்கி உள்ளது. இதனால் அவரும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அமெரிக்கா கடைசியாக 1992ம் ஆண்டு அணுஆயுத சோதனையை மேற்கொண்டது. அதன்பிறகு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ் அணுஆயுத சோதனைக்கு தடை போட்டார். 1996ம் ஆண்டு விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் கையெழுத்திட்டார். இதையடுத்து அமெரிக்கா எந்தவித அணுஆயுத சோதனைகளையும் நடத்தவில்லை.
ஆனால் தற்போது 33 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் உத்தரவால் அமெரிக்கா மீண்டும் அணுஆயுதத்தை கையில் எடுத்து சோதனையை தொடங்க உள்ளது. இது அமெரிக்கா உள்பட மொத்த நாடுகளையும் பரபரப்பாக்கி உள்ளது.
-
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்! -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர் -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications