2வது விவாதமா நான் வரமாட்டேன்.. பின்வாங்கிய டிரம்ப்.. கமலா ஹாரிசை பார்த்து பயமா? இதோ விளக்கம்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையே நேரடி விவாதம் நடந்தது. இந்த விவாதம் முடிவடைந்த நிலையில் இனி கமலா ஹாரிசுடன் நேரடி விவாதத்தில் 2வது முறையாக பங்கேற்க மாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் டொனால்ட் டிரம்ப் கமலா ஹாரிஸை பார்த்து பயந்துவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட ஆர்வமாக இருந்தார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்தி கொள்வது என்பது வழக்கமானதாக உள்ளது.

அந்த வகையில் ஜோ பைடன் - டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு விவாதம் நடத்தினர். இதில் ஜோ பைடன் சொதப்பினார். இதனால் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது ஜோ பைடனுக்கு பின்னடைவானது. இதையடுத்து அவர் அதிபர் போட்டியில் இருந்து விலகினார்.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் இறுதியில் தற்போது துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சமீபத்தில் முறைப்படி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையே நேரடி விவாதம் என்பது கடந்த 10ம் தேதி நடந்தது. இருவருக்கும் இடையேயான முதல் விவாதத்தை ஏபிசி செய்தி நிறுவனம் நடத்தி முடித்துள்ளது.
இதில் சட்ட விரோத குடியேற்றம், கருக்கலைப்பு, அமெரிக்கப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்று பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தரப்பும் காரசாரமாக விவாதித்தனர். டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். அதேபோல் கமலா ஹாரிஸ் கடந்த 4 ஆண்டு ஆட்சி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தம், எதிர்க்கால திட்டம் மற்றும் டொனால்ட் டிரம்பின் செயல்பாடு உள்ளிட்டவற்றை விளாசினார்.
இப்படியாக இந்த விவாதம் முடிவடைந்தது. மேலும் உடனடியாக கமலா ஹாரிஸ் 2வது விவாதத்துக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு டொனால்ட் டிரம்ப் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் உடனான விவாதத்தில் கமலா ஹாரிஷ் தான் வென்றதாக பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.
இத்தகைய சூழலில் தான் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக இனி கமலா ஹாரிசுடன் விவாதத்தில் 2வது முறையாக பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் ட்ரூத் எனும் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஒரு போட்டியாளர் போட்டியில் இருந்து தோல்வியடைந்தார் என்றால் அவர் கூறும் முதல் வார்த்தை என்பது மீண்டும் போட்டியிட வேண்டும் என்பது தான். கருத்து கணிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் கமலா ஹாரிசுக்கு எதிரான இந்த விவாதத்தில் வென்றது நான் தான் என்பது தெரியும்.
இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப்பின் இந்த பதிவு பற்றி கமலா ஹாரிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வடகரோலினாவில் நடந்த பிரசார நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ், ‛‛டொனால்ட் டிரம்புடன் இன்னொரு விவாதத்தை நடத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம். அதற்கு அவரும் ஒப்புக்கொள்வார் என நினைக்கிறேன்'' என நம்பிக்கை தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications