அமெரிக்காவை கதறவிட்ட சீனா.. ஜி ஜின்பிங்கை 4 வாரங்களில் சந்திப்பேன்.. அலறியடித்து ஓடும் டிரம்ப்.. பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்காவும், சீனாவும் எதிரி நாடுகளான உள்ளன. இருநாடுகள் இடையே கடும் வர்த்தக மோதல் உள்ளது. இதில் அமெரிக்கா செய்வதை போல் சீனாவும் பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் 4 வாரங்களில் சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சந்திப்பின் பின்னணியில் சீனா கொடுத்த முக்கிய பதிலடி தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவும், சீனாவும் எதிரி நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை போல் சீனா வளர்ந்து விடக்கூடாது என்பதில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதனால் அவர் பதவியேற்ற உடனேயே சீனாவுக்கு அடுத்தடுத்து வரிகளை விதித்தார். மொத்தம் 185 சதவீதம் வரை வரி போட்டார். சீனா கண்டித்தது.

டிரம்ப் கண்டுக்கொள்ளாததால் சீனாவும் இறங்கி அடித்தது. அமெரிக்காவுக்கு 175 சதவீத வரியை விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. அதன்பிறகு இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சீனாவுக்கு 30 சதவீத வரியை மட்டுமே டிரம்ப் நடைமுறைப்படுத்தினார். மற்ற வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவுக்கு 25 சதவீத வரி நடைமுறையில் இருந்தது. இந்த 30 சதவீதத்தை சேர்த்து மொத்தம் 55 சதவீத வரி அமலில் உள்ளது.
இது அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதியை பாதித்தது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் இல்லாவிட்டாலும் கூட இருநாடுகள் இடையே பழிவாங்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் வரி விதிப்புக்கு பதிலாக சீனா அமெரிக்காவில் இருந்து வாங்கும் விவசாய பொருட்களின் அளவை குறைத்தது. அமெரிக்காவுக்கு பதில் பிற நாடுகளிடம் இருந்து விவசாய பொருட்களை வாங்க தொடங்கி உள்ளது.
இப்படியான சூழலில் தான் இன்னும் 4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‛‛இன்னும் 4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளேன். சீனாவால், அமெரிக்காவின் சோயாபீன் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். சீனா அமெரிக்காவின் சோயாபீன்களை வாங்கவில்லை. இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்காக அவரை சந்திக்கிறேன்.
தூங்கி கொண்டிருந்த ஜோ பைடன் (அமெரிக்காவின் முந்தைய அதிபர்) சீனாவிடம் நம் நாட்டின் விவசாயிகள் சார்ந்த ஒப்பந்தத்தை உறுதி செய்யவில்லை. நம் விவசாயிகளை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். சோயாபீன்ஸ் உள்பட பிற விவசாய பொருட்களை உற்பத்தி செய்து மீண்டும் பெரியதாக சாதியுங்கள்'' என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சீனாவிடம் அமெரிக்கா மண்டியிடுகிறது. குறிப்பாக வரியை வைத்து மிரட்டி வரும் டொனால்ட் டிரம்பையே, சீன அதிபர் ஜி ஜின்பிங் பணிய வைத்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் சீனா எப்போதுமே அமெரிக்காவிடம் இருந்து தான் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது. சீனாவின் சோயாபீன் இறக்குமதியில் 90 சதவீதம் அமெரிக்காவில் இருந்து தான் வரும். தற்போது அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ் இறக்குமதியை சீனா படிப்படியாக குறைத்து வருகிறது. அமெரிக்காவுக்கு பதில் ‛பிரிக்ஸ்' அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசிலிடம் சீனா சோயாபீன்ஸ் வாங்கி வருகிறது.
பிரேசிலை ஒப்பிடும்போது அமெரிக்காவில் முன்கூட்டியே சோயாபீன்ஸ் உற்பத்தி செய்யப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை அமெரிக்காவிடம் இருந்து சீனாவுக்கு சோயாபீன்ஸ் ஏற்றுமதி செய்யப்படும். இதற்கு முன்பு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் சீனா அமெரிக்காவிடம் இருந்து 12 மில்லியன் டன் முதல் 13 மில்லியன் டன் வரையிலான சோயாபீன்ஸ் இறக்குமதி செய்ய முன்பதிவு செய்தது. ஆனால் இப்போது அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்ய சீனாவில் இருந்து எந்த முன்பதிவும் செய்யப்படவில்லை. இது அமெரிக்க விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் அமெரிக்கா மொத்தம் 52.21 மில்லியன் மெட்ரிக் டன் சோயாபீன்ஸை ஏற்றுமதி செய்தது. இதன்மூலம் ரூ.24.47 பில்லியன் டாலரை சம்பாதித்தது. இது இந்திய மதிப்பில் ரூ.2.04 லட்சம் கோடியாகும். இந்த ஏற்றுமதியில் சீனாவிடம் இருந்து மட்டும் அமெரிக்காவுக்கு 12.64 பில்லியன் டாலர் வரை கிடைத்தது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.05,200 லட்சம் கோடியாகும். அமெரிக்காவின் சோயாபீன்ஸ் ஏற்றுமதியில் ஏறக்குறைய 50 சதவீதம் வரை சீனா வதான் வாங்கி வருகிறது. ஆனால் டிரம்பின் வரி விதிப்பால் சீனா பிரேசில் பக்கம் சாய்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய பல லட்சம் கோடிக்கு சிக்கல் ஏற்பட்டது.
சீனாவின் இந்த திடீர் முடிவால் அமெரிக்காவின் சோயாபீன்ஸ் விவசாயிகள் மாற்று மார்க்கெட்டை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டிரம்புக்கு மனு அளித்துள்ளனர். இது டிரம்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் தான் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சோயாபீன்ஸ் ஏற்றுமதி பற்றி பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications