பூமி சூரியனை சுற்றி வரலையாம்.. இது என்ன புதுசா இருக்கே! நாசா ஆய்வாளர்கள் கொடுக்கும் விளக்கம்
வாஷிங்டன்: பூமி உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகிறது- இது தான் நமக்குப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்து இருப்பார்கள். ஆனால், சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில விஷயங்கள் இதைக் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது. இது நமது சூரியக் குடும்பம் குறித்தும், புவி சுற்று வட்டப் பாதை குறித்தும் விரிவாகத் தெரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது.
நமது சூரியக் குடும்பத்தில் சூரியன் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அது நமக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகத் தெரியும். ஆனால், நமது கோள்களின் இயக்கத்தை வைத்துப் பார்க்கும் போது ஒரு சுவாரசியமான விவரம் தெரிய வந்துள்ளது. அதாவது பூமி உண்மையில் சூரியனைச் சுற்றி வரவில்லையாம்.

பேரிசென்டர்: பொதுவாக எந்தவொரு பொருள் சுற்றி வந்தாலும் அதன் மையம் பேரிசென்டர் என்றே அழைக்கப்படும். பிரபஞ்சத்தை ஒரு விளையாட்டு மைதானத்தைப் போலக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்குச் சூரியனும் பூமியும் சுழலும் ஃபுல்க்ரமாக செயல்படுகின்றன. ஆனால், பேரிசென்டர் எனப்படும் மையப் புள்ளி சூரியனுக்குள் நிலையாக இல்லை என்பதையே ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்..
சூரியன் நமது சூரியக் குடும்பத்தின் முக்கிய நட்சத்திரமாக இருந்தாலும், அது எப்போதும் பேரிசென்டராக இருந்து இல்லை.. சூரியனின் அபரிமிதமான நிறை பூமியை அதன் சுற்றுப்பாதையில் இழுக்கிறது.. ஆனால் நியூட்டனின் உலகளாவிய ஈர்ப்பு விதியின்படி, இந்த ஈர்ப்பு என்பது இரண்டு வழிகளிலும் இருக்கும். அதாவது சூரியனின் ஈர்ப்பு விசை பூமி மீது இருப்பது போலவே.. பூமியின் சிறிய ஈர்ப்பு விசையாவது சூரியன் மீது இருக்கும்.
சூரியனின் ஈர்ப்பு: சூரியனின் ஈர்ப்பு விசையுடன் ஒப்பிடும்போது பூமியின் ஈர்ப்பு மிகக் குறைவு என்றாலும், பேரிசென்டர் சூரியினில் இருந்து தள்ள இது போதுமானதாக இருக்கிறது. வியாழன் மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையும் பேரிசென்டரை சூரியனினுக்கு வெளியே தள்ளுகிறது.
இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், "கெப்லரின் மூன்றாவது விதி இதைத் தான் சொல்கிறது. இரண்டு கிரகங்கள் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். பெரிதாக ஒரு கிரகம்.. சிறியதாக ஒரு கிரகம்.. இவை இரண்டுமே பொதுவான ஒரு மையத்தைச் சுற்றி வரும். இதை பேரிசென்டர் குறிப்பிடுகிறோம். இந்த கிரகங்களின் எடை, நிறை மாறுபட்டு இருந்தாலும் அது மையத்தையே சுற்றி வரும்..
அபரிமிதமான நிறை: சூரியனின் அபரிமிதமான நிறை காரணமாக, பேரிசென்டர் பொதுவாகச் சூரியனின் மையத்திற்கு மிக அருகில் உள்ளது.. ஆனால் எப்போதுமே அங்கேயே இருக்கிறது என்று சொல்ல முடியாது. நமது சூரியக் குடும்பத்தில் வியாழன் மற்றும் சனி போன்ற மிகப் பெரிய கிரகங்கள் உள்ளன. அவற்றின் புவி ஈர்ப்பு விசை வலுவாக இருக்கிறது. எனவே, அவை பேரிசென்டரை சூரியனுக்கு வெளியே சில சமயங்களில் தள்ளுகிறது. எனவே, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை விட இந்த நகர்ந்து கொண்டே இருக்கும் மையத்தைச் சுற்றி வருகிறது என்று சொல்வதே சரியாக இருக்கும்" என்கிறார்கள்.
என்ன நடக்கிறது: அதாவது எந்தவொரு பொருள் சுற்றி வரும் போதும் அதற்கு ஒரு மையம் இருக்கும். அதை பேரிசென்டர் என்று அழைப்பார்கள். நமது கிரகங்கள் வட்டப் பாதையைச் சுற்றி வரும் நிலையில், அது சூரியனைச் சுற்றி வருவதாக இருந்தால் பேரிசென்டர் எப்போதும் சூரியனின் மையப் பகுதியில் இருக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் நடந்த ஆய்வுகள் அது எப்போதும் சூரியனில் இருப்பதில்லை என்பதைக் காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications