சிக்கன் பீசால் மெக்டோனால்ட்ஸ் நிறுவனத்திற்கு வந்த சோதனை.. 6 கோடி இழப்பீடு செலுத்த கோர்ட் உத்தரவு
வாஷிங்டன்: சூடான சிக்கென் நக்கெட்சால் பிரபல மெக்டோனால்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அது எப்படி என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஓட்டலுக்கு சாப்பிட சென்றாலே சுடச்சுட உணவுகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆவி பறக்க சூடாக உணவு இல்லையென்றால் பழைய உணவாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட வாடிக்கையாளர்களுக்கு தோன்றும். இதன் காரணமாகவே உணவகங்கள் எப்போதும் சுடச்சுட உணவுகளை பரிமாறுவதில் தான் அக்கறை காட்டுகின்றன. ஆனால், இப்படி சூடான உணவை கொடுத்ததால் ஏற்பட்ட பாதிப்பு, மெக்டனால்ட்ஸ் நிறுவனத்திற்கு 6 கோடியை பங்கம் செய்து இருக்கிறது. இது பற்றிய விவரத்தை பார்க்ககலாம்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல உணவு நிறுவனம் மெக்டோனால்ட்ஸ். உலகம் முழுவதும் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் இயங்கி வருகின்றன. மேற்கத்திய உணவுகள் இந்த மெக்டோனால்ட்ஸ் உணவகத்தில் பிரபலம். பர்கர், கோழி இறைச்சி உணவுகள், முட்டையில் செய்யப்பட்ட உணவுகள் போன்றவை கிடைக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மெக்டோனால்ட்ஸ் உணவுகளை ரசித்து விரும்பி சாப்பிடுவதுண்டு..
இதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வரலாம். கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த தம்பதி தங்கள் நான்கு வயது குழந்தையான ஒலிவியா காராபல்லோவிற்கு மெக்டொனால்டு கடையில் இருந்து சிக்கன் நக்கெட்சை வாங்கி கொடுத்துள்ளார். சிறுமியும் ஆசை ஆசையாய் உணவு பொட்டலத்தை பிரித்து பார்க்கிறார். அதில், சிக்கன் துண்டுகள் சிறுமியின் காலில் விழுந்தது.
சூடாக இருந்த சிக்கன் துண்டுகள் விழுந்ததில் சிறுமி அலறி துடித்துள்ளார். மேலும் காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனால் பெற்றோர்கள் பதறிப்போகினர். மேலும் பார்சல் சரியாக கட்டப்பட்டு இருந்தால் இது போன்ற நிகழ்வு நடந்து இருக்காது என கருதிய பெற்றோர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தனர். மேலும் தங்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் டாலர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை வந்தது. அப்போது மெக்டோனால்ட்ஸ் நிறுவனம் $156,000 மட்டுமே இழப்பீடாக கொடுக்க முடியும் என்று வாதிட்டது. ஏனெனில் சிறுமியின் காயம் 3 வாரங்களில் குணம் ஆகிவிட்டதால் இதற்கு மேல் கொடுக்க முடியாது எனவும் நீதிமன்றம் கூறியது. மேலும் தற்போது கூட அந்த சிறுமி மெக்டோனோல்ட்ஸ்க்கு வந்து சிக்கன் நக்கெட்ஸ் சாப்பிட்டு செல்வதாகவும் வாதாடினர்.
ஆனால், இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த 4 ஆண்டுகளுக்கு $400,000 இழப்பீடும் எதிர்காலத்திற்கு $400,000 எனவும் மொத்தம் இந்திய மதிப்பில் ரூ.6 கோடி இழப்பீடாக அளிக்க உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. நீதிமன்றம் நியாயத்தை வழங்கியுள்ளது. காயத்தால் ஏற்பட்ட தழும்புகளை ஏற்க ஒலிவியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.
-
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications