"யாருமே வேண்டாம்.!" ஓவர் நைட்டில் எல்லா போர்ட் உறுப்பினர்களையும் நீக்கிய எலான் மஸ்க்! தொடரும் அதிரடி
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், துளியும் தாமதிக்காமல் ஏற்கனவே பல அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார்.
உலகில் மிகவும் பிரபலமான டெக் நிறுவனங்களில் முக்கியமானது ட்விட்டடர். 10 எழுத்துகளில் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்ற இந்த கருத்தை அனைவரையும் கவர்ந்துவிட்டது.
இதனால் உலகின் டாப் பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாக ட்விட்டர் மாறியது. ட்விட்டர் நிறுவனத்தின் பயனாளர்களின் எண்ணிக்கையும் மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது.

ட்விட்டர்
இருப்பினும், ட்விட்டர் நிர்வாகம் எடுத்த சில தவறான முடிவுகளால் கடந்த சில ஆண்டுகளாகவே மற்ற நிறுவனங்களுக்கு இணையாக ட்விட்டரால் வளர முடியவில்லை. இதனால் ட்வட்டர் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்தனர். வருமானத்தை ஈட்ட பல்வேறு முயற்சிகளை எடுக்கத் தொடங்கினர். ட்விட்டர் நிறுவனர் டோர்சியை கூட நிறுவனத்தில் இருந்தே தூக்கினர். இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் ஒட்டுமொத்தமாக ட்விட்டர் தளத்தை வாங்குவதாக அறிவித்தார்.

மஸ்க்
இடையில் அவர் வாங்கப் பின்வாங்கினாலும் கூட கோர்ட் கேஸ் என எச்சரித்து ஒரு வழியாக வாங்க வைத்துவிட்டனர். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் அவர் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளார். முதற்கட்டமாக அவர் ஏற்கனவே டாப் அதிகாரிகள் அனைவரையும் வேலையை விட்டு நீக்கிவிட்டார். குறிப்பாகக் கடந்த ஆண்டு ட்விட்டர் சிஇஓவாக நியமிக்கப்பட்ட பராக் அகர்வால் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ஒரே இயக்குநர்
மேலும், எலான் மஸ்க் கோடிங் எழுதுவோருக்கு டெஸ்ட் எல்லாம் வைத்தாகக் கூட தகவல் வெளியானது. இந்நிலையில், அடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றை அவர் எடுத்து இருக்கிறார். அதாவது ட்விட்டர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த போர்டையும் அவர் வேலையைவிட்டு நீக்கியுள்ளார். இதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரே இயக்குநராக அவர் மாறியுள்ளார். விரைவில் அவர் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

போர்ட் உறுப்பினர்கள்
போர்ட் உறுப்பினர்கள் என்பது ஒரு நிறுவனத்தை வழிநடத்த உருவாக்கப்படும். நிறுவனத்தின் அனைத்து முக்கிய முடிவுகளையும் இந்த போர்ட் உறுப்பினர்களே எடுப்பார்கள். இவர்கள் தங்கள் முதலீடுகளையும் யோசித்தே முடிவுகளை எடுப்பார்கள். இதனால் பல நேரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கத் தாமதம் ஏற்படலாம். இப்போது எலான் மஸ்க் ஒட்டுமொத்த ட்விட்டர் போர்டையும் கலைத்து உள்ளதன் மூலம் அவரால் அனைத்து முடிவுகளையும் விரைவாக எடுக்க முடியும்.

எச்சரிக்கை
மறுபுறம் ட்விட்டர் நிறுவனத்திலும் கூட அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளார். வரும் 7ஆம் தேதிக்குள் சைட் வெரிப்பிக்கேஷன் முறையை மாற்ற வேண்டும் என மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்த காலக்கெடுவை அவர் பின்பற்றவில்லை என்றார். அந்த டீமையும் ஒட்டுமொத்தமாக வேலையைவிட்டு நீக்கிவிடுவேன் என்ற எச்சரித்து உள்ளார் மஸ்க். இதனால் ட்விட்டர் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகக் கலக்கத்தில் உள்ளனர்.

பணி நீக்கம்
ட்விட்டரின் ஊழியர்களில் 75 சதவீதம் பேரை மஸ்க் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ட்விட்டர் ஊழியர்களின் எண்ணிக்கை 7,500இல் இருந்து 2,000ஆக குறையும். எஸ்கின் இந்த பிளானை அங்குள்ள பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு உள்ளன. இருப்பினும், இதுபோல எந்தவொரு பிளானும் இல்லை என மஸ்க் தொடர்ந்து மறுத்தே வருவது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications