ஒரே நாளில் நடக்குது.. இந்திய தேர்தல் நடைமுறையை திடீரென பாராட்டிய எலான் மஸ்க்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரரும் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில், அரசின் செயல்திறன் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை வகிக்க இருப்பருவமான எலான் மஸ்க், இந்தியாவின் தேர்தல் நடைமுறையை பாராட்டியுள்ளார். இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகள் எண்ணப்படுவதாக கூறியுள்ளார். கலிபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடியாத நிலையில் எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருக்கிறார்.

உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என பேசியது இந்திய அரசியலிலும் புயலை கிளப்பியது. கடந்த ஜூன் மாதம் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டார். அதில், , "மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

elon musk evm machine america

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக சந்தேகம் எழுப்பி வந்த சமயத்தில், எலான் மஸ்க்கின் இந்த கருத்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. எலான் மஸ்க்கின் பதிவுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவில் இவிஎம் இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. வெளியில் இருந்து அதை ஹேக் செய்வது என்பது சாத்தியமற்றதது" என்று கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், எதையும் ஹேக் செய்ய முடியும்" என்றார். இவிஎம் இயந்திரத்திற்கு எதரான எலான் மஸ்க்கின் இந்த கருத்து பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இந்த நிலையில், எலான் மஸ்க் இந்தியாவின் தேர்தல் நடைமுறையை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகள் எண்ணப்படுவதாக எலான் மஸ்க் கூறியிருகிறார். எலான் மஸ்க் இப்படி கூறியதற்கு காரணம் என்ன என்பது பற்றி பார்ப்போம்..

அமெரிக்காவில் கடந்த 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவை பொறுத்தவரை கலிபோர்னியா மாகாணம் அதிக மக்கள் தொகை கொண்டது ஆகும் இந்த மாகாணத்தில் சுமார் 4 கோடி பேர் வசிக்கிறார்கள். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இங்கு 1.6 கோடி பேர் வாக்களித்து இருந்தனர். இந்த மாகாணத்தில், குடியரசுக்கட்சி முன்னிலையில் உள்ளது.

தேர்தல் முடிந்து 2 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை. சுமார் 3 லட்சம் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர், "இந்தியாவில் 64 கோடி வாக்குகள் எப்படி எண்ணபடுகின்றன என்பது பற்றிய செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை" பகிர்ந்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகள் எண்ணப்படுகின்றன. கலிபோர்னியாவில் இன்னும் வாக்குகள் எண்ணப்படுகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தில் பெரும்பாலானவர்கள் மின்னஞ்சல் மூலமாக வாக்கு செலுத்தியுள்ளனர். இந்த மெயில் வாக்குகளை சரிபார்ப்பது, வாக்குச்சீட்டுகளை முறைப்படுத்துவது போன்றவற்றால் கால தாமதம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+