"பத்தே செகண்ட்.. கதை முடிஞ்சிடும்!" நேருக்கு நேர் மோத புதினுக்கு சவால் விடும் எலான் மஸ்க்
வாஷிங்டன்: ஒரு புறம் உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் குறித்து எலான் மஸ்க் கூறும் கருத்துகள் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.
கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சில் போரை ஆரம்பிக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அப்போது தொடங்கிய போர் 4 வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.
உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் இப்போது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாகத் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் போர்
புதினின் இந்தப் போர் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் அறிவித்து வருகிறது. மேலும், சர்வதேச பிரபலங்கள் பலரும் கூட புதினுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். உக்ரைனில் இணையச் சேவை முடக்கப்பட்ட போது, அவர் தனது ஸ்டார் லிங்க் சாட்டிலைட் மூலம் உதவி இருந்தார்.

நேருக்கு நேர்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன்னுடன் நேருக்கு நேர் மோத முடியுமா என்று ட்விட்டர் வழியாக புதினுக்கு சவால் விடுத்திருந்தார் எலான் மஸ்க். மேலும், கூடவே புதின் தனது கரடியையும் அழைத்து வரலாம் என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட் இணையத்தில் உடனடியாக வைரல் ஆனது. மேலும், சிலர் எலான் மஸ்க் எப்படி வெல்வார் என்பதை விளக்கும் வகையில் இருவருக்கும் இடையே பல ஒப்பீடுகளையும் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

10 நொடி
இந்நிலையில், ட்விட்டர் பயனாளி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தச் சண்டை நிச்சயம் 10 வினாடிகளில் முடிந்துவிடும். அதுவும் எலான் மஸ்க் எவ்வளவு தாக்க வேண்டும் என விரும்புகிறோரோ அதைப் பொறுத்தது தானே தவிர வேறொன்றுமில்லை. மேலும், எலான் மஸ்க் 19 வயது இளையவர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது" என்று ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், இதை ஒப்புக்கொள்ளும் வகையில் எலான் மஸ்க் தனது ட்விட்டரில், "நிச்சயமாக அப்படி தான் நடக்கும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

அமைதி பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் துருக்கியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தப் போர் காரணமாக இரு நாட்டு ராணுவம் மட்டுமின்றி, பொதுமக்களின் இயல்வு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications