ஜெஃப்ரி எப்ஸ்டைன் ஃபைல்ஸ்: பாலியல் தொழிலுக்கு.. சிறுமிகளை எப்படி செலக்ட் செய்திருக்கிறார் என பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்காவை உலுக்கிய பிரபல பாலியல் தொழிலாளியான ஜெஃப்ரி எப்ஸ்டைன், தனது பாலியல் தொழிலுக்கு சிறுமிகளை எப்படி எல்லாம் செலக்ட் செய்திருக்கிறார் என்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரிட்டிஷ் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோருடன் ஜெஃப்ரி எப்ஸ்டைனுக்கு நட்பு இருந்தது. இந்நிலையில் அவர் தொடர்பான ஃபைல்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருக்கிறது. அதில் பாலியல் தொழிலுக்கு சிறுமிகளை ஜெஃப்ரி எப்ஸ்டைன் எப்படியெல்லாம் தேர்ந்தெடுத்தார் என்கிற விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதில், அவருக்கு ஸ்பானிஷ் மற்றும் கருப்பு நிற பெண்கள் தேவையில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இது அப்பட்டமான நிறவெறி மற்றும் இனவெறி கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
தன்னிடம் கருப்பு நிற சிறுமியை அழைத்து வந்ததற்காக, ஏன் என்னிடம் கருப்பு நிற சிறுமியை அழைத்து வந்தீர்கள்? என்று கேட்டதாக இந்த ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. மட்டுமல்லாது தனக்கு திருப்தி அளிக்காதபட்சத்தில் மீண்டும் சிறுமிகளை தேடுமாறு அவர் தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் போதுமான சிறுமிகள் கிடைக்காதப்பட்சத்தில், எஞ்சியிருந்த சிறுமிகளை அழைத்துவர உத்தரவிட்டதாகவும் இந்த ஆவணங்கள் கூறுகின்றன.
தற்போது வெளியான ஆவணங்களில், குளியலறை மற்றும் பிற இடங்களை விவரிக்கும்போது வக்கிரமான சொற்களை எப்ஸ்டைன் பயன்படுத்தியிருக்கிறார். இது சிறுமிகளை அவர் முழுக்க முழுக்க வெறும் நுகர்வு பொருளாக மட்டுமே பார்த்தார் என்பதை உணர்த்துவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தான் விரும்பாத பெண்களை அழைத்து வர வேண்டாம் என்று அவர் குளியளரையில் இருக்கும் போது எச்சரித்திருப்பதாகவும் இந்த ஆவணங்கள் கூறுகின்றன.
ஒரு குறிப்பிட்ட சிறுமி 5-10 நிமிடங்கள் வரை மட்டும் அவருடன் இருந்ததாகவும், உடனே அவர் வெளியேற்றப்பட்டதாகவும் இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆவணங்கள் எப்ஸ்டைன் எந்த அளவுக்கு பாலியல் சுரண்டல் சிந்தனை கொண்டவர் என்பதை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.
யார் இந்த எப்ஸ்டைன்?
இவர் பாலியல் குற்றவாளி. பிறரின் பாலியல் தேவைகளுக்காக சிறுமிகளை கடத்தியிருக்கிறார். இவரது கஸ்டமர்கள் சாதாரண ஆட்கள் கிடையாது. எல்லாம் பெரிய அரசியல் புள்ளிகள். சர்வதேச அரசியல் தலைவர்களுடன் இவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. தொடக்கத்தில் பாலியல் குற்றத்திற்காக 2008ல் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் 2019ல் கைது செய்யப்பட்டார். ஆனால், சிறையில் இருந்தபோது தற்கொலை செய்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும், இவர் சிறையில் இருந்தால் தங்களை பற்றிய உண்மைகள் வெளி வந்துவிடுமோ என்று பயந்த பணக்கார கஸ்டமர்கள், இவரை பிளான் செய்து கொன்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications