டிரம்பிற்கு எதிராக ஒன்று திரளும் ஐரோப்பிய நாடுகள்! உலகளவில் அதிகரிக்கும் பதற்றம்! என்ன நடக்கிறது
வாஷிங்டன்: கிரீன்லாந்து விவகாரத்தால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் மீது டிரம்ப் புதிய வரிகளை அறிவித்த நிலையில், அதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வரி அறிவிப்பு இரு தரப்பு உறவுகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கிரீன்லாந்து விவகாரம் இப்போது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து ஆர்க்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து தேவை எனச் சொல்லி வரும் டிரம்ப், அதைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிகளை எடுத்து வருகிறார்.

டிரம்ப் வரி
இதற்கிடையே தனது கிரீன்லாந்து திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது டிரம்ப் வரியை அறிவித்தார். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு 10% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இந்த வரி 25% வரை உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டும் வரை தொடரும் என்றும் கிரீன்லாந்து மீதான உரிமை கண்டிப்பாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு தேவை என்றும் அது கிடைக்கும் வரை சமரசம் செய்யப்படாது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள்
இதற்கிடையே டிரம்பின் நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. டிரம்ப் நடவடிக்கை அமெரிக்கா- ஐரோப்பிய இடையேயான உறவுகளைப் பாதிப்பதாகக் கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இந்த நடவடிக்கை நிலைமை மேலும் மோசமாக்கும் என்றும் நிலைமையை மேலும் கீழ் நோக்கி இழுத்துச் செல்லும் என்றும் கூறியுள்ளது. ஐரோப்பாவின் இறையாண்மைக்கு எதிரான அச்சுறுத்தலை எதிர்ப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா தங்கள் ட்விட்டரில், "இரு தரப்பிற்கும் இடையேயான உறவை வரி அறிவிப்பு சீர்குலைக்கும். இது நிலைமையை மோசமாக்கும். எங்கள் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்போம்" என்று பதிவிட்டுள்ளனர்.
எதிர்ப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டமைப்பின் உயர்மட்டத் தூதர் கஜா கல்லாஸும் இதே கருத்தைத் தான் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் இருதரப்பு உறவைக் கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்தார். மேலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அந்த முக்கியப் பணியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் எனவும் கூறினார்.
அவசர ஆலோசனை
இந்த விரிசல் சீனா மற்றும் ரஷ்யாவுக்கே ஆதாயமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது இரு தரப்பையும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், கிரீன்லாந்து பாதுகாப்புக்கு நேட்டோ தீர்வு காண வேண்டும் எனவும் கல்லாஸ் குறிப்பிட்டார். டிரம்பின் இந்த தடாலடி அறிவிப்பு தொடர்பாக விவாதிக்க இன்று ஐரோப்பிய நாடுகளின் தூதர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் தூதர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.
-
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி!












Click it and Unblock the Notifications