ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை ரெடி.. முதல் பரிசோதனையில் வெற்றி.. பக்கவிளைவுகள் இல்லை
வாஷிங்டன்: குழந்தை பிறப்பதை தடுக்கும் வகையில் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் முதற்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்த மாத்திரை என்பது என்ன? பரிசோதனை எந்த கட்டத்தில் உள்ளது? எப்போது நடைமுறைக்கு வரும்? பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
நம் நாடு உள்பட உலகம் முழுவதும் குழந்தைகள் பிறப்பை கட்டுப்படுத்த கருத்தை வசதிகள் பெண்களுக்கு தான் அதிகம் உள்ளது. கருத்தரிப்பதை தடுக்க பெண்களுக்கான மாத்திரைகள், ஊசிகள், கருத்தடை சாதனங்கள் அதிகம் உள்ளன.

இந்த விஷயத்தில் ஆண்கள் என்று வந்தால் ஆணுறை மற்றும் வாசெக்டமி (Vasectomies) அறுவை சிகிச்சைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் தான் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கின.
அதன்படி ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. YCT 529 எனப்படும் இந்த மாத்திரை ஹார்மோன் ‛ப்ரீ’ மாத்திரையாகும். இது வைட்டமின் ஏ வளர்சிதை மாற்றத்தை தடுத்து ஆணின் உயிரணு உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தும். இந்த மாத்திரை தற்போது முதற்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
32 வயது முதல் 59 வயது நிரம்பிய 16 ஆண்கள் இந்த பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு மாத்திரைகள் வழங்கி முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட பரிசோதனை என்பது அந்த மாத்திரையை எடுத்து கொள்வதால் பக்கவிளைவு வருகிறதா? என்பது கண்டறிவதை அடிப்படையாக கொண்டது. அதில் மாத்திரை வெற்றி பெற்றுள்ளது. அந்த மாத்திரையை எடுத்து கொண்டால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும் மாத்திரையின் செயல்திறன், கருத்தடைக்கு எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது குறித்து இன்னும் பரிசோதிக்கப்படவில்லை. அடுத்தக்கட்டமாக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த பரிசோதனைகள் வெற்றியடைந்த பிறகே மாத்திரைகள் மார்க்கெட்டுக்கு வரும்.
இந்த மாத்திரை அனைத்து பரிசோதனைகளிலும் வெற்றி பெற்று விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரையாக இது இருக்கும். இந்த மாத்திரையின் பரிசோதனையின் முடிவுகள் குறித்த விபரங்கள் ஜார்னல் கம்யூனிகேஷன் மெடிஷினில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் மெடிஷினின் Endocrinologist டாக்டர் ஸ்டெஃபனி பேஜ் கூறுகையில், ‛‛ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையின் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரை எடுத்து கொள்வதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை'' என்று கூறியுள்ளார்.
இந்த மாத்திரை தயாரிப்பில் அமெரிக்காவின் மினிசோட்டா பார்மசி பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது. கொலலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் யுவர்சாய்ஸ் தெரபியூடிக்ஸ் (YourChoice Therapeutics) நிறுவனம் மேற்பார்வை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications