"வரலாறு படைத்த அமெரிக்கா.." தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது
வாஷிங்டன்: அமெரிக்காவின் தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. தனியார் நிறுவனத்தின் விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும்.
இப்போது சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த சாட்டிலைட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. இந்த முறை நிலவில் தரையிறங்கியது நாசா விண்கலம் இல்லை..

மாறாக ஹூஸ்டனை சேர்ந்த தனியார் நிறுவனம் அனுப்பிய ஒடிஸியஸ் விண்கலம் தான் இப்போது நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.
தனியார் விண்கலம்: நாசாவின் நிதியுதவியுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் நிலவு குறித்து ஆய்வு செய்யப் பல வகை ரோபோக்கள் இருக்கிறதாம். முதற்கட்டமாக நிலவில் தரையிறங்கிய அந்த விண்கலத்தில் இருந்து லேசான சிக்னல் கிடைப்பதாக நாசா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், ஒடிஸியஸ் லேண்டர் இப்போது முழுமையாகச் செயல்படும் நிலையில் இருக்கிறதா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அறுகோண வடிவில் அமைந்துள்ள இந்த விண்கலம் நிலவின் அருகே சென்றதும் தனது வேகத்தைப் பல மடங்கு குறைத்துள்ளது. பிறகு ஒரு மணி நேரத்திற்கு மிக மெதுவாகச் சென்ற அந்த விண்கலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்கியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த விண்கலம் தரையிறங்கி உள்ளது.
விண்கலம்: அந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோவும் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும், இன்னும் தெளிவான சிக்னல்கள் வரவில்லை என்பதால் எதுவுமே உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், முதற்கட்டமாக லேசான சிக்னல்கள் வந்துள்ள நிலையில், இதுவே மிகப் பெரிய வெற்றி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், "எங்கள் கருவிகள் சந்திரனின் மேற்பரப்பில் உள்ளது என்பதை சந்தேகமே இல்லாமல் கூற முடியும். இதற்காக நான் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்" என்றார். கடந்த மாதம் மற்றொரு அமெரிக்க நிறுவனம் அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்க முயன்ற போதிலும் அது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா: அமெரிக்கா 1960களிலும் 1970களிலும் நிலவை ஆய்வு செய்யத் தொடர்ச்சியாக பல்வேறு விண்கலங்களை அனுப்பியது. கடைசியாகக் கடந்த 1972இல் அமெரிக்கா அதன் அப்பல்லோ 17 மூலம் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இப்போது சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனியார் நிறுவனம் மூலம் விண்கலத்தை நிலவுக்கு அமெரிக்கா அனுப்பி இருந்தது
இது தொடர்பாக ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "வரும் காலத்தில் நமது விண்வெளி வீரர்கள் செல்லும் நிலவின் தென் துருவத்தில் என்ன மாதிரியான சூழல் இருக்கிறது என்பதைக் கண்டறிவதே இந்த மிஷனின் முக்கியமான நோக்கம். அங்கே என்ன வகையான தூசி இருக்கிறது.. அது எவ்வளவு சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கிறது, கதிர்வீச்சு சூழல் என்ன? ஆகியவற்றை மனிதர்களை அனுப்பும் முன்பே கண்டறிவதே இதன் நோக்கம்" என்றார்.
அமெரிக்கா 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு மீண்டும் விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு அனுப்ப உள்ளது. அதற்கு முன்பு பல்வேறு சோதனைகளை நாசா நடத்தி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே இந்த தனியார் விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களை ஆய்வு செய்யும் நாசா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications