கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் ஒருநாள் வருமானம் மட்டும் இத்தனை கோடியா?.. தலையே சுற்றுதே!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தில் 20 ஆண்டு காலம் பணியை நிறைவு செய்துள்ளார். சுந்தர் பிச்சை ஆண்டுக்கு சுமார் ரூ. 1,800 கோடி வருமானம் ஈட்டுகிறார். அவரைப் பற்றிய சில சுவாரசிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

டெக் உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் நிறுவனம் கூகுள். மொத்த இணைய உலகத்தையே தனது கைக்குள் வைத்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு கூகுளின் ஆதிக்கம் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பதவி வகித்து வருகிறார்.

Google CEO Sundar Pichai earns Rs 5 crore per day Using 20 Smart phones Intresting Facts about him

51 வயதான சுந்தர் பிச்சை படித்து, வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் படித்தார். கடந்த 2004- ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, அந்த நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, கடந்த 2019 -ஆம் ஆண்டு முதல் தலைமை செயல் அதிகாரி என்ற பொறுப்பை ஏற்றார்.

கூகுள் டூல்பார், ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட கூகுளின் சேவைகளிலும் சுந்தர் பிச்சையின் பங்கு ரொம்பவே முக்கியமானது. கூகுள் குரோம் இல்லாத கணினியையே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கூகுள் குரோம் பிரவுசர் இணையம் பயன்படுத்துவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

இந்த கூகுள் குரோம் உருவாக்கத்திற்கு சுந்தர் பிச்சையின் பங்கு அளப்பறியது. கூகுள் குரோம்-ன் வெளியீடு சுந்தர் பிச்சையின் கரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றதே என சொல்ல வேண்டும். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருப்பதால் அதன் மீது தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

இதனிடையே சுந்தர் பிச்சை குறித்த சில சுவாராசிய தகவல்களும் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்றால் சும்மாவா.. அவருடைய சம்பளத்தை கேட்டால் ஒரு நிமிடம் தலையே சுற்றி விடும்.. ஆம் சுந்தர் பிச்சைக்கு ஒருநாள் சம்பளம் மட்டும் ரூ.5 கோடிக்கும் மேல் வழங்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு 66 ஆயிரத்து 666 ரூபாய் சம்பாதிக்கிறாரம். சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு தோராயமாக கூகுள் நிறுவனத்தில் இருந்து ரூ.1,854 கோடி ரூபாய் காம்பன்ஷேசனாக வழங்கப்பட்டது. இதன்படி பார்த்தால் சுந்தர் பிச்சை ஒரு நாளைக்கு ரூ.5 கோடி பெறுகிறார். அதுபோக சுந்தர் பிச்சை 20 போன்களை வைத்திருக்கிறாராம்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதால் தனது பணிக்காகவே அவருக்கு 20 போன்கள் தேவைப்படுகிறதாம். கூகுளின் பல்வேறு விதமான செயலிகளும் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யவே அவருக்கு இத்தனை போன்கள் தேவைப்படுகிறதாம். அதேநேரத்தில் சுந்தர் பிச்சை தனது செல்போன்களுக்கு அடிக்கடி பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொண்டு இருக்க மாட்டாராம். ஆனால் அதேவேளையில், தனது செல்போன்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சத்தை ஆக்டிவேட் செய்து வைத்து இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+