வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கிரேட் நியூஸ்.." டொனால்ட் ட்ரம்ப் பூரிப்பு.. பங்குச் சந்தை உயர்ந்தாச்சு, கொரோனா தடுப்பூசி வருகிறது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கிரேட் நியூஸ் என்று, கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசி குறித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் மற்றும் ஜெர்மனி கூட்டாளியான பயோஎன்டெக் கொரோனா நோய்க்கு எதிரான மூன்றாவது கட்ட தடுப்பூசி பரிசோதனைகளில் 90 சதவீதம் வெற்றியை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளன.

Great News, Says Trump On Pfizer Coronavirus Vaccine Result

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், "பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, தடுப்பூசி மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது. தடுப்பூசி 90 சதவீதம் பலனளிக்கிறது. இது மிகவும் நல்ல செய்தி" என தெரிவித்துள்ளார்.

12 வயது குழந்தைக்கும் பலன்.. அறிவித்த ஃபைசர்.. கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய ரெடியாகும் இந்தியா12 வயது குழந்தைக்கும் பலன்.. அறிவித்த ஃபைசர்.. கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய ரெடியாகும் இந்தியா

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைய கொரோனா வைரஸ் பரவல் முக்கிய பங்கு வகித்தது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.

3வது கட்ட கொரோனா தடுப்பூசி டிரையல் 90% வெற்றி! 3வது கட்ட கொரோனா தடுப்பூசி டிரையல் 90% வெற்றி! "மனித குலத்திற்கு மகத்தான நாள்"- அமெரிக்க நிறுவனம்

Great News, Says Trump On Pfizer Coronavirus Vaccine Result

இந்த நிலையில்தான், அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் தடுப்பூசி விரைவில் தயாராகிவிடும் என வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். ஜோ பிடன் வந்தால், கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் வேகம் குறைந்துவிடும் எந்று பிரச்சாரத்தின்போது தெரிவித்தார். இந்த நிலையில்தான், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு கிரேட் நியூஸ் என பாராட்டியுள்ளார், டொனால்ட் ட்ரம்ப்.

English summary
US President Donald Trump on Monday said it is "great news" that a vaccine jointly developed by Pfizer and BioNTech was 90 percent effective in preventing Covid-19 infections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X