Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா - ரஷ்யா போல்.. நட்பாக இருந்த அமெரிக்கா - வெனிசுலா எதிரியானது எப்படி? டிரம்ப் கோபத்தின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தென்அமெரிக்கா நாடாக இருக்கும் வெனிசுலா மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளது. வெனிசுலா தலைநகர் கராகஸை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியா - ரஷ்யா போல் நெருங்கிய நட்பு நாடாக இருந்த அமெரிக்கா - வெனிசுலா இப்போது பகையாளியாக மாறியது எப்படி? வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு என்ன கோபம்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா - வெனிசுலா இடையேயான மோதல் வலுத்துள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் வெனிசுலாவின் தலைநகர் கராகஸை தாக்கியது. போர் விமானங்களில் இருந்து 7 இடங்களில் குண்டு வீசப்பட்டது. மேலும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோர் அமெரிக்காவால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

how-did-the-friendly-relationship-between-the-us-and-venezuela-turn-into-enmity-the-background-to-t

இதனால் இருநாடுகள் இடையே போர் வருகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்தாதல் அடுத்ததாக வெனிசுலாவின் நிலை என்ன? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

இந்நிலையில் தான் இருநாடுகள் இடையே என்ன பிரச்சனை? இந்தியா - ரஷ்யா போல் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்த இருநாடுகள் இடையே பகை ஏற்பட்டது எப்படி? டிரம்புக்கு, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது என்ன கோபம்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். தென்அமெரிக்க நாடான வெனிசுலா மிகவும் சிறிய நாடு. லத்தீன் அமெரிக்கா நாடு எனவும் இது அழைக்கப்படுகிறது. இங்கு மக்கள்தொகை 2.80 கோடியாக உள்ளது.
சிறிய நாடாக இருந்தாலும் கூட எண்ணெய் வளம் மிக்க நாடு வெனிசுலாவாகும். உலகிலேயே அதிகப்படியான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் அரபு நாடுகளை பின்னுக்கு தள்ளி வெனிசுலா முதலிடத்தில் உள்ளது. இதனால் வெனிசுலாவின் பொருளாதாரம் என்பது கச்சா எண்ணெயை நம்பியே உள்ளது.

மேலும் வெனிசுலாவும், அமெரிக்காவும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருநாடுகள் இடையே கரிபீயன் கடல் அமைந்துள்ளது. இந்த இருநாடுகளுக்கும் இடையே நெருங்கிய நட்பு என்பது இருந்து வந்தது. உதாரணமாக இந்தியா - ரஷ்யா இடையே இருக்கும் நட்பு போல் இருநாடுகளும் ஒற்றுமையாக செயல்பட்டு வந்தன. நம் நாட்டுக்கு தேவையான விமானங்கள், ராணுவ தளவாடங்களை நாம் அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்குகிறோம். அதுபோல் தான் வெனிசுலாவும், அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் ராணுவ தளவாடங்கள், போர் விமானங்களை வாங்கி பயன்படுத்தி வந்தது.

குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் அமெரிக்கா சார்பில் வெனிசுலாவுக்கு எஃப் 16 ரக போர் விமானங்கள் வழங்கப்பட்டன. 1982ம் ஆண்டில் வெனிசுலா மற்றும் அமெரிக்காவின் லாக்ஹிட் மார்ட்டின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா எஃப் 16 ரக 24 போர் விமானங்களை வெனிசுலாவுக்கு வழங்கியது. இந்த விமானங்கள் 1982ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டுக்குள் வழங்கியது. அதுவரை எஃப் 16 ரக போர் விமானங்களை அமெரிக்கா தான் பயன்படுத்தி வந்தது.

அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாட்டுக்கு முதல் முறையாக எஃப் 16 ரக போர் விமானங்களை வழங்கியது என்றால் அது வெனிசுலாவுக்கு தான். அதுமட்டுமின்றி அந்த போர் விமானங்களை அப்கிரேட் செய்யும் பணிகளையும் அமெரிக்காவே மேற்கொண்டு வந்தது. இதன்மூலம் நாம் இருநாடுகள் இடையே இருந்த நட்பை புரிந்து கொள்ள முடியும்.

இப்படி நல்ல நட்பாக இருந்த இருநாடுகள் இடையே கடந்த 2000ம் ஆண்டில் பிரச்சனை ஏற்பட்டது. வெனிசுலாவின் அதிபராக இருந்த ஹூகோ சாவேஷ் மற்றும் நிகோலஸ் மதுரோ ஆகியோரின் செயல்பாடு அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் தற்போது வரை தொடர்ந்து மோசமாகி வந்தது. இதற்கு அந்த நாட்டின் அதிபராக இருக்கும் நிகோலஸ் மதுரோ தான் முக்கிய காரணமாகும்.

இவர் கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்பும் முன்வைத்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமானது. அதுமட்டுமின்றி நிகோலஸ் மதுரோவை கைது செய்ய உதவினால் ரூ.438 கோடியை பரிசுத்தொகையாக உயர்த்தி டிரம்ப் அறிவித்தார். அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக இருநாடுகள் இடையேயான மோதல் என்பது வலுத்து வந்தது.

வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தது. இந்நிலையில் தான் தற்போது வெனிசுலாவின் தலைநகர் கராகஸை குறிவைத்து அமெரிக்க விமானப்படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. 7 இடங்களில் குண்டுகளை வீசிய அமெரிக்க விமானப்படை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கிளியா ஃபுரோரஸை சிறை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+