"சூறாவளி பாம்!" முடங்கிப்போன அமெரிக்கா.. இந்த தலைமுறையிலேயே மோசமான நாள்.. ஐயோ இப்படி ஆகிடுச்சே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது இந்த தலைமுறையிலேயே இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கூட அவர்களால் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இதை பெரும்பாலான சர்வதேச தலைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் நிலைமை ரொம்வே மோசமாகி வருகிறது. கடந்தாண்டு ஐரோப்பிய பகுதிகளில் அடித்த வெள்ளமும் சரி, அமெரிக்காவில் வைத்துச் செய்த கடும் வெயிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்ததை யாரும் மறந்துவிட முடியாது.

 அமெரிக்கா

அமெரிக்கா

இப்போது மீண்டும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிக முக்கிய விடுமுறை தினம் என்றால் அது கிறிஸ்துமஸ் தினம்தான். கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டு வரை இருக்கும் இந்த விடுமுறை நாளில் அமெரிக்க மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தைக் கழிக்கவே விரும்புவார்கள். இதனால் எங்கிருந்தாலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் அனைவரும் எப்படியாவது தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிடுவார்கள். ஆனால், இந்த முறை நிலைமை அப்படியில்லை.

 பனிப்புயல்

பனிப்புயல்

அங்கு இப்போது மிக மோசமான ஒரு பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப காலங்களில் இந்தளவுக்கு மோசமான ஒரு பனிப்புயல் ஏற்பட்டதே இல்லை. கடந்த சனிக்கிழமை உருவான இந்த பனிப்புயல் அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு மழை, வெள்ளம், கடுமையான குளிரைக் கொண்டு வந்துள்ளது. இந்த புயல் காரணமாகப் பல ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் பேரால் கிறிஸ்துமஸ் தினத்தன்று தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

 முடங்கிய அமெரிக்கா

முடங்கிய அமெரிக்கா


அமெரிக்காவில் சுமார் 7,500 விமானங்கள் தாமதமாகியுள்ளன.. மோசமான வானிலையால் சுமார் 3,462 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள பலரும் கார்களில் தங்கள் சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், பனிப்புயல் மிக மோசமாக இருப்பதால், சாலைப் பயணம் மிகவும் ஆபத்தானதாக மாறலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்புயல் காரணமாக அங்கு அருகே வரும் வாகனங்கள் கூட தெரிவதில்லையாம். இதனால் கார்களில் சொந்த ஊருக்குச் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பவர்கட்

பவர்கட்

அதேபோல இந்த பனிப்புயல் காரணமாக அங்கு மிகப் பெரிய பவர்கட்டும் ஏற்பட்டுள்ளது. சுமார் 3.7 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. அங்குள்ள பல மாகாணங்களில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 13 மாநிலங்களில் வசிப்பவர்கள் வெப்பத்தை அதிகரிக்கும் தெர்மோஸ்டாட்களை குறைவாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அதிக மின்சாரம் தேவைப்படும், கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தளவுக்கு அங்கு நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது.

 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பாதிப்பு

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பாதிப்பு


இதனால் பெரும்பாலான அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் கூட கொண்டாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். அங்கு சுமார் 20 கோடி மக்கள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் மிகக் கடுமையான குளிர் நிலவுகிறது. டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர் பதிவாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் இந்த விடுமுறை தினம் முற்றிலுமாக நாசமாகியுள்ளது.

 ஏன் ஏற்படுகிறது.

ஏன் ஏற்படுகிறது.

இந்த சூறாவளி பாம் என்பது குளிர் மற்றும் வறண்ட காற்று ஒன்றுடன் ஒன்று மோதுவதால் உருவாகிறது. சூடான காற்று மேலே எழுப்பி, ​​ஒரு மேக அமைப்பை உருவாக்குகிறது. இது காற்றழுத்தத்தையும் குறைக்கிறது. இது குறைந்த அழுத்தப் பகுதியைச் சுற்றி எதிரெதிர் திசையில் சுற்றும் போது பனிப் புயல் உருவாகிறது. குளிர் காற்று இதில் மோதும்போது வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே ஆபத்தான நிலைக்குச் செல்லும். வரும் நாட்களில் நிலைமை கொஞ்சம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+