‛உச்சக்கட்டம்’.. உடலுறவிலும் சுயநலம்.. ஆண்களால் பாதிக்கப்படும் பெண்கள்.. ஆய்வு முடிவில் திடுக் தகவல்
உடலுறவில் தங்களின் துணைகள் எவ்வளவு சுயநலமாக செயல்பட்டனர் என்பதை பெண்கள் நினைத்து பார்க்கின்றனர்.
வாஷிங்டன்: திருமணமான ஜோடிகளுக்கு இடையே தாம்பத்திய உறவு முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் தான் செக்ஸ் உறவு தொடர்பாக அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியான நிலையில் உடலுறவிலும் அடிக்கடி ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைவதாக கூறப்படுகிறது. மேலும் உடலுறவிலும் ஆண்கள் சுயநலமாக இருப்பதாகவும், இவர்களால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்பது தொடர்பான பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தாம்பத்தியம்.. இல்லற வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது. கணவன், மனைவி என இருவருக்கும் இடையே திருப்தி அடைவது முழுமையான தாம்பத்தியம் என கூறுகின்றன.
இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதனை பல ஜோடிகள் புரிந்து கொண்டு நடப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

உடலுறவில் திருப்தியின்மை
இதனால் பல சந்தர்ப்பங்களில் ஜோடிகள் இடையே தாம்பத்திய திருப்தியின்மை ஏற்படுகிறது. இதுவே இல்லற வாழ்க்கையில் புயல் வீசவும் காரணமாக அமைகின்றன. இதனால் கணவன்-மனைவி இல்லாவிட்டால் உறவில் இருக்கும் ஜோடிகள் இடையே உடலுறவில் நல்ல புரிதல் என்பது வேண்டும். இந்த புரிதல் மட்டும் இருந்தால் போதும் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனைகளும் எழாது என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது.

ரட்ஜர்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வு
இந்நிலையில் தான் ஜோடிகள் இடையேயான உறவு குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக செக்ஸ் ரிசர்ச் ஜர்னலில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுயநலம் கொண்ட ஆண்களால்
அதில் உடலுறவின்போது ஆண்கள் அடிக்கடி உச்சக்கட்டத்தை எட்டினாலும் கூட பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவது இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயநலம் கொண்ட ஆண் துணைகளால் தான் பெரும்பலாலும் இந்த பிரச்சனையை பெண்கள் அனுபவிக்கின்றனர். இதுதவிர சூழ்நிலை, சமூகம், தனிப்பட்ட காரணங்கள் உள்ளிட்டவையும் உடலுறவின்போது பெண்கள் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கு தடையை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையான பகிர்வு இல்லை
மேலும் பெண்கள் ஒவ்வொரு உடலுறவின்போது கூட உச்சக்கட்டத்தை எட்டுவது தொடர்பாக குறிப்பால் வெளிப்படுத்துவதை கொண்டுள்ளனர். அதோடு உச்சக்கட்டத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் பெண்கள் அதனை எட்டுவதற்கான வாய்ப்பு என்பது அதிகமாக உள்ளது. இருப்பினும் கூட அதனை பலரும் வெளிப்படையாக தங்களின் துணைகளிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது இல்லை. இதனை பெரும்பாலான துணைகள் கேட்பதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பத்துக்கு முன்னுரிமை
மேலும் உடலுறவின் தங்களின் துணைகள் எவ்வளவு சுயநலமாக செயல்பட்டனர் என்பதையும் பெண்கள் நினைத்து பார்க்கின்றனர். இதனால் ஒவ்வொரு உறவின்போதும் ஆண்கள், பெண்களை உச்சமடைய அழுத்தம் கொடுக்காமல் அவர்களின் இன்பத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் ஆண்களை போலவே பெண்களின் பாலியல் சார்ந்த இன்பமும் முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications