உலகமே வியந்து பார்க்குதே.. மாபெரும் சாதனையை படைக்க போகும் இஸ்ரோ.. இது எப்படி சாத்தியம்! செம
வாஷிங்டன்: இந்தியா இந்தாண்டு நிலவுக்கு வெற்றிகரமாக சாட்டிலைட் அனுப்பி சோதனை செய்த நிலையில், அடுத்து மிகப் பெரிய ஒரு பாய்ச்சலுக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.
விண்வெளி துறையில் 2024இல் இந்தியா மாபெரும் சாதனையைப் படைக்க உள்ளது. இந்தாண்டில் தான் நிலவுக்கு இந்தியா வெற்றிகரமாக ராக்கெட் அனுப்பி இருந்தது.

இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் முதல்முறையாகத் தரையிறங்கிய சாட்டிலைட் என்ற சிறப்பையும் அது பெற்றது.
இஸ்ரோ: இதற்கிடையே அடுத்தாண்டு இந்தியா ஒரு லட்சிய ஆய்வைத் தொடங்க உள்ளது. நாளை ஜனவரி 1ஆம் தேதி, கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மர்மங்கள் குறித்து ஆய்வு செய்யும் எக்ஸ்போசாட் என்ற சாட்டிலைட்டை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. நாசாவுக்கு பிறகு விண்வெளி குறித்த தீவிர ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நாடாக இந்தியா மாறுகிறது.
மிகப் பெரிய நட்சத்திரங்களில் அதன் எரிபொருள் காலியாகும் போது அவை கருந்துளைகள் அல்லது நியூட்ரான் நட்சத்திரங்களை உருவாக்கும். XPoSAT என்ற சாட்டிலைட் இறந்த நட்சத்திரங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ வடிவமைத்த சாட்டிலைட் ஆகும். எக்ஸ்ரே ஃபோட்டான்கள் மூலம் கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் அருகே உள்ள கதிர்வீச்சுகளை ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும்.
புதிய XPoSAT சாட்டிலைட்: இந்த புதிய XPoSAT சாட்டிலைட் மூலம் நாம் கண்டுபிடிக்கும் விஷயங்கள் விண்வெளி குறித்தும் கருந்துளைகள் குறித்தும் முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல்1 என்று விண்வெளி குறித்து ஆய்வு செய்ய இந்தியா தொடர்ச்சியாக பல்வேறு சாட்டிலைட்களை அனுப்பி வருகிறது. குறைந்த செலவில் விண்வெளி பயணங்களை வெற்றிகரமாக மேற்கொள்வதை இந்தியா வாடிக்கையாகவே வைத்துள்ளது.
இந்தியா இப்போது அனுப்பும் XPoSATஇன் மதிப்பு ரூ 250 கோடி ஆகும். இது அதிகம் போல தோன்றினாலும் உண்மையில் விண்வெளி குறித்த ஆய்வுகளில் இது மிக மிகக் குறைவு. அமெரிக்காவின் நாசா கிட்டதட்ட இதே பணிக்காக IXPE என்ற சாட்டிலைட்டை அனுப்பி இருந்தது. அதற்கான செலவு $188 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 1500 கோடியாகும்.
காஸ்மிக் ஆய்வு: XPoSATஇன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பேராசிரியர் பிஸ்வஜித் பால் இது குறித்துக் கூறுகையில், "காஸ்மிக் பொருட்களில் உள்ள தீவிர காந்தப்புலங்கள் மற்றும் தீவிர ஈர்ப்புச் சூழலில் உள்ள பொருள் மற்றும் கதிர்வீச்சுக்கு இடையேயான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தவே இதன் நோக்கமாகும். இந்த மிஷன் விண்வெளி குறித்துப் பல கேள்விகளுக்கு விடை கொடுக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
எப்போது விண்ணில் பாயும்: பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்த பிஎஸ்எல்வி ராக்கெட் 469-கிலோ பேலோடுடன் XPoSAT உள்ளிட்ட 10 சாட்டிலைட்களுடன் விண்ணில் பாய உள்ளது. நாளை காலை சரியாக 9.10 மணிக்கு இந்த சாட்டிலைட் விண்ணில் பாய உள்ளது.
இதற்கான கவுன்ட் டவுனும் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்திய ஆய்வாளர்கள் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதற்கும், விண்வெளி ஆய்வுத் துறை நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கும் இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications