அமெரிக்காவுக்கு 30% அதிரடி வரி .. டிரம்புக்கு சைலன்ட்டாக பதிலடி கொடுத்த இந்தியா.. கதறும் எம்பிக்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதற்கு பதிலடியாக நம் நாடும் ,அந்த நாட்டின் பருப்பு வகைகளுக்கு 30 சதவீதம் வரை இறக்குமதி வரி விதித்துள்ளது. இதனால் பதறிப்போன அமெரிக்க எம்பிக்கள் டொனால்ட் டிரம்புக்கு கடிதம் எழுதி இந்தியாவின் 30 சதவீத வரியை ரத்து செய்ய வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி 25 சதவீதமும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இனு்னொரு 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரி விதித்துள்ளார்.

இந்த வரி விதிப்பால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. இருநாடுகளின் பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேசி வந்தனர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நம் நாட்டின் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படியான சூழலில் தான் நம் நாடு, அமெரிக்காவுக்கு ‛சைலன்ட்டாக' அடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் பருப்பு வகைகளை நம் நாட்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய 30 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் போட்ட 50 சதவீத வரிக்கு பதிலடியாக நம் நாடு இதனை செய்துள்ளது. இதுபற்றிய விவரம் வெளிவராமல் இருந்த நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி பெரிய அளவில் நம் நாட்டின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் நம் நாட்டின் பதிலடி வரி விதிப்பு பற்றி அறிந்த அமெரிக்காவின் எம்பிக்களான வட டகோட்டாவின் கெவின் க்ரேமர் மற்றும் மொன்டானாவின் ஸ்டீவ் டேய்ன்ஸ் ஆகியோர் டொனால்ட் டிரம்புக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதன்பிறகு தான் இந்த விஷயம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

அதில், ‛‛கடந்த ஆண்டு அக்டோபர் 30 அன்று அமெரிக்காவின் மஞ்சள் பட்டாணிக்கு இந்தியா 30 சதவீதம் சுங்க வரி விதித்தது. நவம்பர் 1 முதல் அது அமலுக்கு வந்தது. இந்தப் புதிய வரி விதிப்பு குறித்து இந்திய அரசு பகிரங்கமாக அறிவிக்கவில்லை. அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு மத்தியில் இந்தியாவின் நுட்பமான சமன்பாட்டு அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இதுபற்றி பலரும் தற்போது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபற்றி புவிசார் அரசியல் நிபுணர் நவ்ரூப் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்காவின் வரிகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2025 அக்டோபரில் நடைமுறைக்கு வந்தது'' என்று கூறியுள்ளார். இன்னொவரோ, ‛‛நாம் நாம் அமைதியாக பதிலடி கொடுத்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.

இது நியாயமற்ற முறையில் உள்ளது. மேலும் அமெரிக்கப் பருப்பு பயிர் உற்பத்தியாளர்கள் தங்கள் உயர்தர பொருட்களை இந்தியாவுக்கு போட்டியின்றி அனுப்பி வருகின்றனர். இதனால் அமெரிக்க விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். குறிப்பாக வட டகோட்டா மற்றும் மொன்டானா போன்ற விவசாய மாநிலங்களுக்கு இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது. இதனால் இந்திய வரியை நீக்குவது பற்றி பேச்சுவார்த்தை கொடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

கடிதம் எழுதிய எம்பிக்களின் வட டகோட்டா மற்றும் மொன்டானா உள்ளிட்டவை அமெரிக்காவில் பட்டாணி மற்றும் பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் முன்னணி மாகாணங்களில் ஒன்றாக உள்ளது. அடங்கும். உலகளாவிய பருப்பு நுகர்வில் சுமார் 27 சதவீதம் பங்களிக்கிறது . குறிப்பாக இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இப்படியான சூழலில் நம் நாடு விதித்த 30 சதவீத வரி அங்குள்ள விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தான் அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+