Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய முடியாது.. அமெரிக்காவின் மூக்கை உடைத்த அஜித் தோவல்... பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது அமெரிக்காவுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் உண்மையில் அமெரிக்காவில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணி ப்ளூம்பெர்க் (Bloomberg) வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை கிளப்பி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீதம் வரியை போட்டார். அமெரிக்காவின் பரஸ்பர வரி என்ற வகையில் 25 சதவீதம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் என்று 50 சதவீதத்தை விதித்தார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

Donald Trump Marco Rubio Narendra Modi Ajit Doval India US Trade Deal

மேலும் டொனால்ட் டிரம்ப் உள்பட அவரது ஆலோசகர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் நம் நாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். டொனால்ட் டிரம்ப் மிகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால் திடீரென்று பார்த்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டொனால்ட் டிரம்ப் உள்பட அமெரிக்க பிரதிநிதிகள் தங்களின் டோனை மாற்றினர்.

வரி குறைத்த டிரம்ப்

இந்தியாவை கடுமையாக எதிர்ப்பை கைவிட்டனர். இப்போது இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி டொனால்ட் டிரம்ப், மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசியதோடு, பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார்.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டு அமெரிக்கா அல்லது வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் என்றும், அமெரிக்காவுடனான வர்த்தகம் 500 பில்லியன் டாலராக உயர்த்த உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மோடி சொன்னது என்ன?

ஆனால் இதுபற்றி பிரதமர் மோடியோ வரி குறைப்பு பற்றி மட்டுமே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார். அமெரிக்கா உடனான வர்த்தகம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட விவரங்கள் பற்றி மோடி பேசவில்லை. வெளியுறவுத்துறை, வர்த்தக துறையும் இதுபற்றி இன்னும் சொல்லவில்லை.

வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் மட்டும் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது என்று மட்டும் கூறுகிறார். அதன் விவரங்களை அவர் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் இந்தியா உடனான இந்த வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாடி தீர்க்கின்றனர். டிரம்ப் வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர்.

ப்ளூம்பெர்க் அறிக்கை

இந்நிலையில் தான் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்துக்காக டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதனை நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் உறுதியாக தெரிவித்துள்ளாராம். இதனை ப்ளூம்பெர்க் அறிக்கை உறுதி செய்துள்ளது.

தோவல் - ரூபியோ சந்திப்பு

அந்த ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛டிரம்ப் நிர்வாகத்தின் தொடர் தாக்குதல் மற்றும் இந்தியாவின் ஏற்றுமதி மீதான அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியின் பின்னணியில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் நடந்தது.

இந்தியா அடிபணியாது

அப்போது மார்கோ ரூபியோவிடம், அஜித் தோவல் முக்கிய மெசேஜை கூறினார். ‛‛அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களின் மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. இந்தியா தனக்கு எதிரான பல அமெரிக்க அரசுகளை பார்த்துள்ளது.

இதனால் டிரம்ப்பின் பதவிக்காலம் முடியும் வரை நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்துக்கு காத்திருப்போம். இந்தியா மீதான பகிரங்கமான விமர்சனங்களை நிறுத்த வேண்டும். அதுதான் இரு நாடுகளின் உறவுகளை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு செல்ல உதவும் என்று கூறியுள்ளார்.

இந்த மீட்டிங் மிகவும் ரகசியமாக நடந்தது. இந்த தகவலை டெல்லியில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால் இந்த சந்திப்பு பற்றி நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகமும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப்

இந்த அஜித் தோவல் - மார்கோ ரூபியோ மீட்டிங்கிற்கு பிறகு தான் டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களின் தொனியில் மாற்றம் ஏற்பட்டது. செப்டம்பர் மாத இறுதியில் டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். அவர் மோடியை தனது "நண்பர்" என்றும் உரையாடினார்.

முன்னதாக, டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர் பீட்டர் நவ்ரோ, பிரதமர் மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மேற்கொண்டதாக டிரம்ப் உரிமை கோரினார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை சுட்டிக்காட்டி இது மோடியின் போர் என்று பீட்டர் நவ்ரோ விமர்சனம் செய்திருந்தார்.

சந்திப்புக்கு பின் மாற்றம்

மேலும் 50 சதவீத வரி விதிப்பும் நம் நாட்டுக்கு அடியாக விழுந்தது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசலை அதிகப்படுத்தியது. அதன்பிறகு டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் நம் நாட்டை விமர்சனம் செய்வதில் வாயை கட்டுப்படுத்தினர். இதற்கு அஜித் தோவல் - மார்கோ ரூபியோ மீட்டிங்கில் நடந்த சம்பவம் தான் காரணம் என்று ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிரம்ப் கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் - இந்தியா போர் நிறுத்தம் பற்றி முதலில் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் கேள்விகளை தொடுத்தன.

டிரம்பால் அரசுக்கு நெருக்கடி

அதுபோல் தான் இப்போது டிரம்ப் ட்ரூத் வலைதளத்தில் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றி சில வரிகளை குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி இன்னும் விரிவான தகவலை இருநாடுகளும் கூறாத நிலையில் மோடி பணிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

டொனால்ட் டிரம்ப் மத்திய அரசை மிரட்டி கச்சா எண்ணெய் முதல் விவசாய பொருட்கள் வரையிலான ஒப்பந்தத்துக்கு பணிய வைத்துவிட்டதாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

விட்டு கொடுக்காத மத்திய அரசு?

ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்திலேயே டிரம்ப் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது. அவர் சொல்வதை போல் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாது. தேவை என்றால் அவரது பதவிக்காலம் முடிந்த பிறகு கூட வர்த்தக ஒப்பந்தத்துக்கு காத்திருக்க ரெடியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளதால் தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ள ஒப்பந்ததத்திற்ம் கூட இந்தியாவுக்கு எதிரான விதிகளுக்கு பிரதமர் மோடியின் மத்திய அரசு ஒப்புக்கொண்டு இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+