Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதையில் தாறுமாறாக டிரக்கை ஓட்டிய இந்திய இளைஞர்.. அமெரிக்க சாலையில் நடந்த பயங்கரம்! ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 21 வயது இந்தியரான ஜஷன்பிரீத் சிங் மீது, தெற்கு கலிபோர்னியாவில் மூன்று பேர் உயிரிழக்கக் காரணமான பயங்கர சாலை விபத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய ஜஷன்பிரீத் சிங், போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தை இயக்கியிருப்பதாகவும், விபத்திற்கு முன்பாக பிரேக்கை ஜஷன்பிரீத் சிங் பிடிக்கவே இல்லை என்றும் போலீசார் கூறினர்.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாக அருகே சான் பெர்னார்டினோ கவுண்டி நெடுஞ்சாலையில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து வாகனங்களை இடித்து தள்ளியபடி வந்த டிரக் முன்னோக்கி சென்று கொண்டிருந்ததால் அடுத்தடுத்த கார்கள் விபத்தில் சிக்கிக் கொண்டன.

America road accident police

21 வயது இந்தியர் கைது

இந்த விபத்து குறித்த காட்சிகள் டிரக்கிங் டேஷ் கேமராவில் பதிவாகி இருந்தது. டிரக் மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த லாரியை அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 21 வயது இந்தியரான ஜஷன்பிரீத் சிங் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜஷன்பிரீத் சிங் கைது செய்யப்பட்டார்.

ஜஷன்பிரீத் சிங் 2022-ல் அமெரிக்காவின் தெற்கு எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படுகிறது. மார்ச் 2022-ல் கலிபோர்னியாவின் எல் சென்ட்ரோ செக்டாரில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால், விசாரணைகள் நிலுவையில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளை விடுவிக்கும் கொள்கையின் அடிப்படையில் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் உட்கொண்டு விபத்தை ஏற்படுத்தினாரா

இந்த விபத்தில், டிரக்கை ஓட்டி வந்த ஜஷன்பிரீத் சிங் மற்றும் ஒரு மெக்கானிக் படுகாயம் அடைந்துள்ளனர். வாகனம் ஒன்றிற்கு டயர் மாற்ற உதவிய இந்த நபர், லாரி மோதியதில் கார் இடித்து தள்ளியதில் காயம் அடைந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய ஜஷன்பிரீத் சிங், போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தை இயக்கியிருப்பதாகவும், விபத்திற்கு முன்பாக பிரேக்கை ஜஷன்பிரீத் சிங் பிடிக்கவே இல்லை என்றும் போலீசார் கூறினர்.

ஜஷன்பிரீத் சிங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ ஊழியர்களால் பரிசோதிக்கப்பட்ட பிறகு, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜஷன்பிரீத் சிங் ஓட்டிச்சென்ற டிரக் ஏற்படுத்திய விபத்தில், உயிரிழந்த மூன்று பேரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

கடந்த மாதம் இதேபோன்று ஒரு சம்பவம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய லாரி ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய சம்பவங்களில் இதுவும் ஒன்று. கடந்த ஆகஸ்ட் மாதம், புளோரிடாவின் ஃபோர்ட் பியர்ஸில் மூன்று பேரைக் கொன்ற விபத்தை ஏற்படுத்தியதாக ஹர்ஜிந்தர் சிங் என்ற இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஹர்ஜிந்தர் சிங் 2018-ல் அமெரிக்காவின் தெற்கு எல்லையை சட்டவிரோதமாகக் கடந்து, கலிபோர்னியாவில் வர்த்தக ஓட்டுநர் உரிமம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+