அமெரிக்காவில் இருக்கீங்களா?.. தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம்.. அமெரிக்க அரசு அறிவிப்பு
வாஷிங்டன்: கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடும் அமெரிக்கர்களுக்கு இலவச பீர் வழங்கப்படும் என ஜோ பிடன் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.41 கோடியாக உள்ளது. இங்கு 6 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். தினந்தோறும் 10 ஆயிரத்திற்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாகாணங்களும் அமெரிக்க அரசும் பல வகையான கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.

சுதந்திர தினம்
அந்த வகையில் அமெரிக்க சுதந்திர தினத்திற்கு முன்னதாக நாட்டில் உள்ள 70 சதவீத பெரியவர்களுக்கு தடுப்பூசி போட அதிபர் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார். இந்த கோடை காலத்தில் கொரோனா இல்லாத அமெரிக்காவாக மாற்ற அவர் முனைப்பு காட்டி வருகிறார்.

அமெரிக்க குடிமகன்கள்
இந்த நிலையில் தடுப்பூசி நிறுவனங்களும் அமெரிக்க குடிமகன்களை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் கிப்ட் வவுச்சர், விளையாட்டுக்கான அனுமதி டிக்கெட்டுகள் அல்லது ஊதியத்துடன் கூடிய விடுப்பு என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை ஆன்யூசெர் புஷ் நிறுவனம் அறிவித்துள்ளது.

2 மில்லியன் பேர்
கடந்த ஏப்ரலில் ஒரு நாளை 2 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் இத்தனை நாட்களாக ஒரு நாளைக்கு 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து தற்போது ஒரு நாளைக்கு 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நாள் வரை அமெரிக்க மக்கள்தொகையில் 62.8 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திட்டம்
133.6 மில்லியன் பேர் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் ஜோ பிடனின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் ஆன்யூசெர் புஷ் நிறுவனம் ஜூலை 4 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம் என்பதுதான் அந்த திட்டமாகும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications