நேரம்தான்.. கொரோனா தடுப்பு மருந்து எடுத்தவருக்கு உடல் நலக்குறைவு.. ஆய்வை நிறுத்திய ஜான்சன் & ஜான்சன்
வாஷிங்டன்: கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுப் பணியின்போது, தன்னார்வலருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, அந்த பணியை ஜான்சன் அன்டு ஜான்சன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உலகில் பல முன்னணி ஆய்வு நிறுவனங்கள், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா, அமெரிக்காவில் தனது கொரோனா மருந்தை பரிசோதித்து வருகிறது.

ஆக்ஸ்போர்டு ஆய்வு
இறுதிகட்ட ஆய்வின்போது, பங்கேற்பாளர்களில் ஒரு பெண்ணுக்கு, உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. டிரான்ஸ்வெர்ஸ் மையேலிடிஸ் என்ற முதுகு தண்டுவடம் சார்ந்த ஒரு பிரச்சினை அப்பெண்ணுக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஆய்வை நிறுத்தியது ஆக்ஸ்போர்டு. பிற நாடுகளில் தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன.

தற்காலிக நிறுத்தம்
இந்த நிலையில்தான், ஜான்சன் அன்டு ஜான்சன் நிறுவன மருந்து பரிசோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக மருந்து வழங்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளது ஜான்சன் அன்டு ஜான்சன். அவருக்கு எந்த மாதிரி பிரச்சினை ஏற்பட்டது என்பதை ஜான்சன் அன்டு ஜான்சன் தெரிவிக்க மறுக்கிறது. பங்கேற்பாளரின் தனிப்பட்ட தகவல்களை வெளியே சொல்வது அறம் இல்லை என்று, ஜான்சன் அன்டு ஜான்சன் தெரிவிக்கிறது.

விசாரணை ஆரம்பம்
திடீரென அந்த நபருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் இது தடுப்பு மருந்தால்தான் ஏற்பட்டதா என்பதை இப்போது கண்டறிய முடியவில்லை எனவும், ஜான்சன் அன்டு ஜான்சன் கூறுகிறது. எனவே, தடுப்பு மருந்தால்தான், பங்கேற்பாளருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதா, அல்லது வேறு காரணமா என்பதை கண்டறிய, விசாரணையை ஆரம்பித்துள்ளது அந்த நிறுவனம்.

பக்கவிளைவு இயல்புதான்
பெருமளவுக்கான நபர்களுக்கு மருந்தை செலுத்தி பரிசோதித்து பார்க்கும்போது, அதில் யாருக்காவது பக்கவிளைவுகள் ஏற்படுவது சகஜம்தான் என்கிறார்கள் மருத்துவத்துறை வல்லுநர்கள். மொத்தம் 60,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்த ஜான்சன் அன்டு ஜான்சன் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மருந்து ஒரே டோஸ்தான். ஆனால், அமெரிக்காவில் தயாராகும் பிற தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் 2 டோஸ் கொடுத்து பரிசோதிக்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications