பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு.. மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்.. 100-க்கும் மேற்பட்டோர் பலி
வாஷிங்டன்: பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
தென்மேற்கு பசிபிக் கடலோரத்தில் அமைந்துள்ள நாடு பப்புவா நியூ கினியா.. இந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் என்ன நடக்கிறது என்று அறியும் முன்பே நிலச்சரிவில் சிக்கி தங்கள் உயிரை இழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் பலி எண்ணிக்கை கிட்டதட்ட 300 இருக்கும் என்று அருகில் உள்ள நிங்கா ரோல் கிராம மக்கள் கூறினர்.
நிலச்சரிவில் சிக்கிய இடங்களில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராட்சத இயந்திரங்களுடன் மீட்பு பணிகளை உள்ளூர் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய இடத்தின் பரப்பளவு அதிகமாக இருப்பதோடு, பாறைகளும் மரங்களும் நிறைந்து இருப்பதால் மீட்பு பணியில் சவால் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் பலியான செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராபே தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எங்கா மாவட்ட அதிகாரிகள் மறுசீரமைப்பு பணிகளையும் தொடங்கியிருப்பதாகவும் பிரதமர் ஜேம்ஸ் மராபே தெரிவித்தார். சேதம் குறித்த முழு தகவல் கிடைக்கவில்லை என்றும் கிடைத்த பிறகு பலியானோர் எண்ணிக்கை பற்றிய முழுமையான விவரங்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications