Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி - டிரம்பை எப்படி குறை சொல்லலாம்? அமெரிக்காவில் இடதுசாரிகளை இறங்கி அடித்த இத்தாலி பெண் பிரதமர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ‛'பிரதமர் மோடி, டொனால்ட் டிரம்ப் மற்றும் நான் பேசினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்கின்றனர். நீங்கள் எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும் மக்கள் எங்களுக்கு தான் ஓட்டுப்போட்டு வருகின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம்'' என்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி முழங்கி உள்ளார். அவரது இந்த பேச்சின் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இத்தாலி பிரதமராக இருப்பவர் ஜார்ஜியா மெலோனி. இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடக்கும் CPAC 2025 மாநாட்டில் காணொலி வாயிலாகபங்கேற்று பேசினார். அப்போது தற்போதைய சூழலில் உலக நாடுகளின் அரசியல், உலக நாட்டு தலைவர்களின் மீதான வன்மம் பற்றி கவலை தெரிவித்தார்.

narendra modi donald trump giorgia meloni

குறிப்பாக பிரதமர் மோடி, டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியா மெலோனி உள்ளிட்டவர்களை இடதுசாரிகள் குறிவைத்து விமர்சனம் செய்வதை சுட்டிக்காட்டி அவர் வார்னிங் செய்தார். இந்த மாநாட்டில் ஜார்ஜியா மெலோனி பேசும்போது கூறியதாவது:

டொனால்ட் டிரம்ப் வெற்றியால் தற்போது இடதுசாரிகள் பதற்றத்தில் உள்ளனர். அவர் வெற்றி பெற்றதுமே இடதுசாரிகளின் வெறுப்பு என்பது வெறித்தனமாக மாறிவிட்டது. டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலே மற்றும் என்னை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கன்சர்வேட்டிவ் தலைவர்களாக (கலாசாரம், சமூக பழக்கவழக்கங்களை காக்கும் தலைவர்கள் அல்லது பழமைவாதிகள்) உள்ள இவர்களின் செல்வாக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

மேலும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் தலைவர்கள் வெற்றி மட்டும் பெறுவது இல்லை. உலகளவில் ஒன்றாக இணைந்து செயல்பட தொடங்கி உள்ளனர். 90களில் அமெரிக்க அதிபராக பில் கிளின்டன் மற்றும் பிரிட்டன் பிரதமராக டோனி பிளேயர் இருந்தபோது உலகம் முழுவதும் இடதுசாரிகளுக்கான நெட்வொர்க்கை ஏற்படுத்தினர். அவர்கள் ஸ்டேட்ஸ்மேன் என்று அழைக்கப்பட்டனர்.

ஆனால் இப்போது டொனால்ட் டிரம்ப், மெலோனி, மிலே, மோடி ஆகியோரின் பேச்சுக்களை ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல் என்று சொல்கின்றனர். இது இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாட்டை தான் காட்டுகிறது. அதோடு இதனை நாங்கள் பயன்படுத்தி கொள்கிறோம். இன்னொரு நல்ல விஷயம் என்றால் இடதுசாரிகளின் பொய்களை மக்கள் நிராகரிக்கின்றனர். அவர்கள் எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும் கூட மக்கள் எங்களுக்கு தான் ஓட்டளித்து வருகின்றனர். ஏனென்றால் இடதுசாரிகள் நினைப்பது போல் சாதாரண மக்கள் ஒன்றும் அப்பாவிகள் இல்லை'' என்று கூறியுள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பிரதமர் மோடிக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இருவரும் நல்ல நட்பில் உள்ளனர். இதனை பலமுறை அவர் வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக நம் நாட்டின் பிரதமராக 3வது முறையாக மோடி பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணம் சென்றதே இத்தாலிக்கு தான். இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா இந்த கூட்டமைப்பில் இல்லாமல் இருந்தாலும் கூட இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் செல்பி வீடியோ எடுத்துக்கொண்டார்.

அதன்பிறகு அதனை ஜார்ஜியோ மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார் "மெலோடி குழுவில் இருந்து வணக்கம்" என்று கூறியிருந்தார். அதாவது இருவரின் பெயர்களிலும் உள்ள எழுத்துகளை ஒன்றிணைத்து ‛மெலோடி டீம்' என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் அதிக கவனம் பெற்றது.

அதற்கு முன்பாக என்று பார்த்தால் கடந்த 2023ம் ஆண்டில் துபாயில் நடைபெற்ற COP28- உச்சி மாநாட்டின் போதும் பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த செல்பி இணையத்தில் அப்போதும் டிரெண்ட் ஆகியிருந்தது. இப்படியாக பிரதமர் மோடியுடன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனிக்கு நல்ல உறவு என்பது இருந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் பிரதமர் மோடி, டொனால்ட் டிரம்ப் மற்றும் தன்னை இடதுசாரிகள் விமர்சித்து வருவதை ஜார்ஜியா மெலோனி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+