300 புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்! 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கும் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வாங்கப்பட்ட 300 பேருந்துகள் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.. 3 நாட்களாக இந்த பேருந்துகள் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்த நிலையில், இன்று பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மேலும், பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் நாட்டிலேயே சிறந்த கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. அதை மேலும் மேம்படுத்தும் வகையில் மாநில அரசு சார்பில் புதிய பேருந்துகள் தொடர்ச்சியாக வாங்கப்பட்டு வருகிறது.

Vijay Tamil nadu Tamil nadu Bus Fleet Expansion

பேருந்துகள்

தமிழ்நாட்டில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் உள்ள நிலையில், மீதமுள்ள 6 போக்குவரத்துக் கழகங்கள் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளின் தொடக்கவிழா கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டன.

இதற்காக அந்த பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் இருப்பினும் தொடக்க விழா நடத்தப்படாததால் அந்த பேருந்துகள் 3 நாட்களாக அப்படியே நிற்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டன. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதிகாரிகள் விளக்கம்

இருப்பினும், இது உண்மைக்கு மாறான தகவல் என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. அதாவது நாளை வெள்ளிக்கிழமை மொகரம் அனுசரிக்கப்படும் சூழலில், தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதாலேயே பேருந்துகள் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டன.

இந்தச் சூழலில் தான் ஒரு வழியாக இன்று அந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன. போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்கு வாங்கப்பட்ட இந்த 300 புதிய பேருந்துகள் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த விழாவில் பேருந்துகள் சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

பேருந்து சேவை

சுமார் 127.21 கோடி ரூபாய் செலவில் 300 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.. சென்னை உட்பட 6 கோட்டங்களில் 164 டீசல் பேருந்துகள், 134 சிஎன்ஜி பேருந்துகள் என மொத்தம் 300 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+