புத்தாண்டு இரவில் சதி? முறியடித்த அமெரிக்கா.. உலகெங்கும் முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து
வாஷிங்டன்: அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க முயன்ற தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல புகழ்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்றிரவு உலகமே 2026ஐ வரவேற்க ரெடியாக காத்திருக்கிறது. எப்போதும் உலகெங்கும் நாடுகளைக் கடந்து கொண்டாடப்படும் நாளாக இந்தப் புத்தாண்டு இருக்கிறது. இதனால் உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்தாண்டும் பல புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா தாக்குதல்
இந்தச் சூழலில் அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டங்களைச் சீர்குலைக்கும் வகையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த மர்ம நபர்கள் திட்டமிட்டிருந்தனர். இது தொடர்பாக நான்கு பேரை மோஜாவே பாலைவனத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் அரங்கேறிய இது கைது நடவடிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்தாவது நபரையும் உள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள்
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து பல முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்படும் மோசான நிகழ்வுகளைத் தடுக்கவே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகப் புகழ்பெற்ற சிட்னியின் வானவேடிக்கை, பாரிஸின் இசை நிகழ்ச்சிகள், டோக்கியோவின் ஷிபுயா கவுண்ட்டவுன் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், உலக நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோருகின்றன.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 14ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்திருந்தது. இரு தீவிரவாதிகள் அங்கிருந்த அப்பாவி மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடந்த சிட்னியின் பாண்டி கடற்கரை புத்தாண்டு நிகழ்வுகள், வானவேடிக்கை, பெரிய விருந்துகள் ரத்து செய்யப்பட்டன.
சிறப்பு நிகழ்வுகள்
பிரான்ஸின் பாரிஸ் காவல்துறை பாதுகாப்பு காரணங்களுக்காக சான்ப்ஸ்-எலிசீஸ் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தது. பெருங்கூட்டங்களில் அசம்பாவிதம் நடப்பதைத் தடுக்கப் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதேநேரம் வானவேடிக்கை மற்றும் லைட் ஷோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அதிகக் கூட்டம் மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, புகழ்பெற்ற ஷிபுயா நிலையம் கவுண்ட் டவுன் நிகழ்வை அதிகாரிகள் ரத்து செய்தனர். பெல்கிரேட் நகரின் அதிகாரப்பூர்வப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் செர்பியப் புத்தாண்டு கொண்டாட்டங்களும் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களைத் தடுக்கத் தொடர் விழிப்புணர்வு அவசியம் என்பதையும் இது வலியுறுத்தியது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications