சில அடி தூரம் தான்.. ரன்வேயில் திடீரென குறுக்கே வந்த விமானம்! நூழிலையில் தப்பிய பயணிகள்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமரிக்காவின் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானம் தரையிறங்க வந்த போது பிரைவேட் ஜெட் விமானம் ஒன்று திடீரென குறுக்கே வந்தது உடனே விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவில் சமீப காலமாக விமான விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இது விமான பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நூழிலையில் மிகப்பெரிய விமான விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. ரன்வேயில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க வந்த போது திடீரென பிரைவேட் ஜெட் ஒன்று ரன்வேக்குள் வந்துள்ளது. பதைபதைக்க வைக்க கூடிய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

America airplane world

அமெரிக்காவில் உள்ள பிசியான விமான நிலையங்களில் ஒன்று சிகாகோ விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க வந்தது. ரன்வேயில் இறங்கி ஓட விமானம் தயாரானது. விமானத்தின் சக்கரம் வெளியே வந்து விமானத்தை ரன்வேயில் லேண்ட் ஆக பைலட் தயாரான போது, திடீரென ரன்வேக்குள் ஒரு விமானம் வந்தது.

இதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த விமானி, மிகவும் சாதுர்யமாக விமானத்தை டேக் ஆப் செய்தார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமான போக்குவரத்து நிர்வாகத்தின் அனுமதியின்றி பிரைவேட் ஜெட் விமானம் ரன்வேக்குள் வந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் விமானத்தின் விமானி உரிய நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இல்லெயெனில் இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்க கூடும். செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணியளவில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ரன்வேயில் இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விமானம் குறுக்கே வருவதை பார்த்ததும் சவுத்வெஸ்ட் விமானம் 2504 என்ற பயணிகள் விமானத்தின் பைலட், விமானத்தை லேண்டிங்க் செய்வதை விட்டுவிட்டு மீண்டும் வானை நோக்கி செல்கிறது.

சிறிது நேரம் கழித்து விமானம் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ரன்வேயில் இரு விமானங்களும் வெறும் 50 அடி தூரத்திற்குள் நேருக்கு நேர் வந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், " பிரைவேட் ஜெட் விமானத்தின் விமானிக்கு முதலில் தவறுதலான தகவல் வந்தது இருக்கிறது. இதனால் ரன்வே 31 க்கு விமானத்தை கொண்டு சென்று இருக்கிறார்.

அதற்குள் தவறை உணர்ந்த விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் 9க்கும் மேற்பட்ட முறை ரன்வேயில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் இதை அலட்சியம் செய்துவிட்டு பிரைவேட் ஜெட் விமானி சென்றுள்ளார். இதன் காரணமாக இந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. சவுத் வெஸ்ட் விமானம் நெப்ரஸ்கா மாகாணத்தில் உள்ள ஒமஹா நகரில் இருந்து சிகாகோவிற்கு வந்துள்ளது. பிரைவேட் ஜெட் விமானம் டென்னசி மாகாணத்தில் உள்ள நாக்ஸ்வில்லிக்கு புறப்பட இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+