ஓபன் ஏஐ போனால் என்ன.. மைக்ரோசாப்ட் பக்கம் ஒதுங்கிய சாம் ஆல்ட்மேன்.. உள்ளே வந்த சத்யா நாதெல்லா! பரபர
வாஷிங்டன்: ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இணைந்துள்ளார்.
ஏஐ துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றால் சந்தேகமே இல்லாமல் அது சாட்ஜிபிடி தான். உலகில் மற்ற ஏஐ கருவிகளைக் காட்டிலும் இந்த சாட்ஜிபிடி மிகவும் வலிமையான ஒன்றாக இருந்தது. அதன் வெற்றி மற்ற ஏஐ கருவிகளை உருவாக்கக் காரணமாக இருந்தது.

சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ கருவிகள் மனிதக் குலத்தை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இப்படி உலகையே புரட்டிப் போட்ட இந்த சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தவர் சாம் ஆல்ட்மேன். இவர் ஏஐ குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தொடர்ச்சியாகப் பேசி வந்தார். டெக் உலகில் முக்கியமான இடத்தில் இருந்த சாம் ஆல்ட்மேன் கடந்த சனிக்கிழமை திடீரென ஓபன் ஏஐ சிஇஓ பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
அவருடன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் ப்ரோக்மேன் என்பவரும் பதவி விலகினார். சாம் ஆல்ட்மேன் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இணைந்துள்ளார். அவரும் கிரெக் ப்ரோக்மேனும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ பிரிவை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நதெல்லா உறுதி செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications