சீன ராணுவத்தின் பலத்தை காட்டுவதற்காக இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்.. அமெரிக்கா குற்றச்சாட்டு
வாஷிங்டன்: சீனா தனது ராணுவத்தின் பலத்தை காட்டுவதற்காக இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா- சீனா எல்லை பிரச்சினையை தீவிரமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணமடைந்தனர். அது போல் சீன தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்த தாக்குதலை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. இதுகுறித்து கிழக்காசியா, பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலாளர் டேவிட் ஸ்டீல்வெல் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் லடாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தியது.
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவுடனான சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை இந்திய சீன எல்லையில் சீனா மிகவும் ஆழமாகவும் அதிக துருப்புகளை கொண்டும் நுழைந்தது. இதுவரை இதுபோன்று ஒன்று வரலாற்றில் நடந்ததே இல்லை.
இந்த மோதல் சீனா படையின் வலிமையை இந்தியாவுக்கு காட்டிக் கொள்வதற்காக இருந்திருக்கலாம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீனா தந்திரமாகவும் இருக்கலாம். எனக்கு தெரியவில்லை என்றார்.
கால்வன் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமானது என கூறுவதை இந்தியா மறுத்துள்ளது. கால்வன் பள்ளத்தாக்கு குறித்து சீனாவின் கருத்து மிகைப்படுத்தப்பட்டது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என இந்தியா தெரிவித்துள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications