பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு.. இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபரை சந்தித்த பிரதமர் மோடி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை திரும்ப இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும் என உறுதி அளித்தார்.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நியூயார்க்கில் நாசாவ் கொலீசியம் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நியூயார்க்கில் உள்ள பாலேஸ் ஹோட்டலில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா கலீத் அல் ஹமாத் அல் சபா அல் சபா -வை சந்தித்து பேசிய மோடி, அதன்பிறகு பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ்-சை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும், காசாவில் நடைபெறும் துயர நிகழ்வுகள் தமக்கு கவலை அளிப்பதாகவும் பிரதமர் மோடி பேசினார். அதேபோல, காசா -இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications