வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாவற்றையும் மாற்றிய கொரோனா.. பிடன், கமலா ஹாரிஸ் பதவி ஏற்பு விழாவில் மிகப்பெரிய மாற்றம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்; அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே பதவியேற்பார்கள், தொடக்க விழாக்கள் கோவிட் -19 நெறிமுறைகளுக்கு இணங்க வரலாற்று விழாவின் பாரம்பரிய நிகழ்வுகள் குறைக்கப்பட உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 270க்கும் அதிகமான எலக்ட்ரோல் வாக்குகளை ஜோ பிடன் பெற்றது உறுதியானதால் அவரது வெற்றியும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பதவி ஏற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி உள்ளது பிடனின் குழு.

President-elect Joe Biden to take oath outside Capitol amid Covid-19 restrictions

பிடனின் குழு ஜனவரி 20ம் தேதி ஜோ பிடன் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டி சில விரிவான விவரங்களை அண்மையில் வெளியிட்டது. இந்த விழாவில் அதிபர் பதவியில் இருந்து விடைபெறப்போகும் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பார் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

வாக்கு மோசடி நடந்ததாகவும் தனது வெற்றி திருடப்பட்டதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுளை கூறி வரும் டிரம்ப்பின் நீதிமன்ற முறையீட்டு முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன. ஜோ பிடன் அதிபராவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து பிடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வாரா என்பது குறித்து தற்போதைய மற்றும் முன்னாள் வெள்ளை மாளிகை உதவியாளர்களிடம் இதுவரை கூறவில்லை. எனினும் அவர் பாரம்பரியத்தின் பொருட்டு ஒப்புக்கு கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த வாரத்தில் புதிய தடுப்பூசி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்த போதிலும், பொது மக்களுக்கு இது கிடைப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். எனவே பிடனின் பதவியேற்பு விழாவை கொண்டாடுவதற்காக வாஷிங்டன் டி.சி.க்கு வர வேண்டாம் என்று பிடனின் குழு ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது

தலைநகரில் பிரதான எதிர்க்கட்சி.. பல இடங்களிலும் கூடுதல் சீட்.. கேரளாவில் கால் பதிக்கும் பாஜக!தலைநகரில் பிரதான எதிர்க்கட்சி.. பல இடங்களிலும் கூடுதல் சீட்.. கேரளாவில் கால் பதிக்கும் பாஜக!

விழாவில் மிகவும் குறைவான நபர்களே பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. அணிவகுப்பு நடத்துவது மறுபரிசீலனை செய்யப்படும் என்று பிடனின் அரசியல் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, பிடன் தொடக்க உரையை நிகழ்த்துவார், அது "வைரஸை வெல்வதற்கும், சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், நாட்டை ஒன்றிணைப்பதற்குமான தனது பார்வையை பிடன் வெளிப்படுத்தும் வகையில் இருந்தும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
President-elect Joe Biden and Vice President-elect Kamala Harris will take their oaths of office outside the US Capitol building as inauguration planners seek to craft an event that captures the traditional grandeur of the historic ceremony while complying with Covid-19 protocols
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X