விலகிய மர்மம்.. 2 ஆம் உலகப் போரின் போது மூழ்கிய கப்பல்.. கடலில் 4 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: இரண்டாம் உலகப் போரின் போது 864 ஆஸ்திரேலிய கைதிகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்களுடன் சென்று கொண்டிருந்த ஜப்பானிய வணிக கப்பல் கடலில் மூழ்கியது. இந்தக் கப்பல் 84 ஆண்டுகளுக்குப் பிறகு 13,123 அடி அடி ஆழத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
கடந்த 1942- ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பப்புவா நியூ கினியாவில் இருந்து சீனாவின் ஹைனான் நகருக்கு ஜப்பானிய வணிக கப்பல் சென்று கொண்டிருந்தது. எஸ்.எஸ். மோன்டேவீடியோ மாரு என்ற பெயர் கொண்ட இந்தக் கப்பலில் 864 ஆஸ்தேரேலிய சிறைக்கைதிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

இந்த கப்பல் பிலிபைன்ஸ் கடல் பகுதியில் உள்ள சென்று கொண்டிருந்த போது லூசன் தீவு அருகே சென்று கொண்டிருந்த போது இந்த கப்பலை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கியது. இந்த தாக்குதலில் சேதம் அடைந்த கப்பல் கடலில் மூழ்கியது. வெறும் 10 நிமிடங்களில் இந்த கப்பல் கடலில் மூழ்கியது.
கப்பலில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்து வந்தனர். கப்பலில் பயணம் செய்த 1,080 பேரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டனர். எனினும், இந்த கப்பல் குறித்த மர்மம் முற்றிலுமாக விலகவிலை. அவ்வப்போது தேடும் பணி குறித்து விவாதம் எழுந்தது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்த சைலண்ட் வேர்ல்டு ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு எஸ்.எஸ். மோன்டேவீடியோ மாரு என்ற கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது. கடந்த 6 ஆம் தேதி இந்தப் பணி தொடங்கப்பட்டது. உயர் தொழில் நுட்பத்தின் மூலம் இந்தப் பணி நடைபெற்றது. கடலுக்கு அடியில் சுமார் 4 ஆயிரம் அடி ஆழம் வரையில் நடைபெற்ற தேடுதல் பணியில் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பலை விட ஆழமான பகுதியில் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கப்பலில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் கப்பலில் இருந்து எந்த ஒரு பொருளையும் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படாது என்று தேடுதல் பணியில் ஈடுபட்ட அறக்கட்டளை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications