வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஷ்யா மீது பொருளாதார தடை.. கச்சா எண்ணெய் விலை உயர்வு எங்களின் முதுகை உடைக்கிறது! அமைச்சர் ஜெய்சங்கர்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் முதுகை உடைக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்தார். அப்போது கிழக்கு ஆசிய பிரச்சினைகள், உக்ரைன் போர், பரஸ்பர நலத் திட்டங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த பல மாதங்களாக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்ற சம்பவம்.. குட்டு வைத்த இந்தியா.. அமைச்சர் ஜெய்சங்கர் பரபர அட்டாக் பாகிஸ்தானில் கட்டாய மதமாற்ற சம்பவம்.. குட்டு வைத்த இந்தியா.. அமைச்சர் ஜெய்சங்கர் பரபர அட்டாக்

இந்தியாவின் தனிநபர் பொருளாதாரம்

இந்தியாவின் தனிநபர் பொருளாதாரம்

வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் தனிநபர் பொருளாதாரம் 2,000 டாலர்கள்தான். இதனால் எண்ணெய் விலை எங்களுக்கு பெரிய கவலையாக மாறியுள்ளது. எங்களின் முதுகை உடைக்கிறது. கடந்த சில மாதங்களாகவே எரிசக்தி சந்தை பெரும் அழுத்தத்தில் உள்ளது.

விலை அதிகரிப்பு

விலை அதிகரிப்பு


விலை அதிகரிப்பு ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கிறது என்றால் மறுபக்கம் அந்த எரிசக்தி கைக்கு வந்து சேருவதில் மிகவும் சிரமம் இருக்கிறது. எங்களை போன்ற வளர்ந்து வரும் நாடுகள் எரிசக்தி தேவைகளை எப்படி பூர்த்தி செய்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் மாதம் முதல் 50 மடங்கு உயர்ந்துள்ளது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த மொத்த எண்ணெயில் 0.2 சதவீதம் மட்டுமே ரஷ்ய எண்ணெய் இருந்தது. மேற்கத்திய நாடுகளால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைள் அந்த நாட்டின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

 பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள்

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள்

மேலும் உக்ரைன் தாக்குதலை ரஷ்யா நடத்துவதை கண்டித்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி கொள்முதல் செய்வதை குறைத்துவிட்டன என ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுக்கு எஃப் 16 போர் விமானங்கள் வழங்கும் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஜெய்சங்கர் கூறுகையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் போர் விமானங்கள் யாருக்கு எகிராக பயன்படுத்தப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும் என விமர்சித்திருந்தார்.

English summary
India's Foreign Affairs minister S. JaiShankar says that Spike in oil price breaks India's back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X