சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்!
வாஷிங்டன்: கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கூகுள் CEO சுந்தர் பிச்சை உரையாற்ற வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுந்து வெளியேறியது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் 135-வது பட்டமளிப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராகக் சுந்தர் பிச்சை அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்று வந்த அவர், மாணவர்கள் மத்தியில் பேச தொடங்கினார். ஆனால், அவர் பேச தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில், அரங்கில் இருந்து 100 முதல் 200 வரையிலான மாணவர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து திடீரென வெளியறினர்.

வெளியேறிய மாணவர்கள் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியும், பாலஸ்தீன விடுதலை முழக்கமிட்டும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதற்கு காரணம், கூகுள் நிறுவனம் சமீபத்தில் இஸ்ரேல் அரசுடன் போட்டுக்கொண்ட தொழில்நுட்ப ஒப்பந்தம்தான்.
கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இணைந்து இஸ்ரேல் அரசு மற்றும் அந்நாட்டு ராணுவத்திற்கு சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்பில் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' மற்றும் ஏஐ (AI) தொழில்நுட்பங்களை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன. ஏற்கெனவே இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் போர் விதிகளை மீறி ஏகப்பட்ட அட்டூழியங்களை செய்து வருகிறது. அமெரிக்க ஆதரவு நாடுகள் கூட, இஸ்ரேலை இந்த விஷயத்தில் கண்டித்திருக்கிறன்றன.
ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளலாத இஸ்ரேல், எடுத்தோம்.. கவுத்தோம் என இஷ்டத்துக்கு பாலஸ்தீன மக்களை கொலை செய்திருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பேர்ப்பட்ட நாட்டுடன் தொழில்நுட்ப டீலிங் போட்டதற்கு கண்டனம் தெரிவித்தும்தான் மாணவர்கள் நேற்று சம்பவம் செய்திருக்கிறார்கள்.
ஆனால், சுந்தர் பிச்சை இதற்கெல்லாம் அசையவில்லை. யார் போனால் எனக்கு என்று, மீதமுள்ள மாணவர்களை பார்த்து பேச தொடங்கினார். வழக்கமா.. பல்கலைக்கழகங்களில் பேசும்போது AI பற்றிதான் சுந்தர் பிச்சையின் உரை இருக்கும். ஆனால், மாணவர்களின் வெளிநடப்புக்கு பிறகு.. வேண்டும் என்றே AI பற்றி பேசுவதை அவர் தவிர்த்தார்.
எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார். பல்கலைக்கழகத்தை விட்டு அவர் வெளியே வரும்போது, பிபிசி (BBC) செய்தியாளர் ஒருவர், "மாணவர்களின் போராட்டம் குறித்து உங்களது ரியாக்ஷன் என்ன?" என்று கேள்வி கேட்க.. சுந்தர் பிச்சை பதில் சொல்லாமல் சென்றுவிட்டார். மாணவர்கள் வெளிநடப்பு செய்த தொடர்பான வீடியோக்கள், சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
கூகுளின் டெக்னாலஜி என்ன செய்யும்?
கூகுள் நிறுவனத்தின் டெக்னாலஜியை பயன்படுத்தி, இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறது என்று, 'No Tech for Apartheid' போன்ற மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த பின்னணியில்தான் நேற்று மாணவர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications