கருக்கலைப்பு மாத்திரைக்கு மீண்டும் அனுமதி.. அதிரடி உத்தரவு பிறப்பித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
வாஷிங்டன் : அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பெண்கள் விருப்பப்பட்டால் தங்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமை நடைமுறையில் இருந்து வருகிறது. கருக்கலைப்பு மாத்திரைகள் அமெரிக்க சந்தைகளில் சாதாரணமாக விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், கருக்கலைப்பு செய்யும் உரிமையை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவின் 13 மாகாணங்களில் கருக்கலைப்புக்கான தடை அமலில் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், பொதுமக்கள் அமெரிக்கா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கருக்கலைப்பு தங்களின் உரிமை என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மைஃபெப்ரிஸ்டோன் கருக்கலைப்பு மாத்திரையை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனம் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நீதித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்த தடை விதிக்கும் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. மேலும் மைஃபெப்ரிஸ்டோன் கருக்கலைப்பு மாத்திரையை தற்காலிகமாக பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மைஃபெப்ரிஸ்டோன் மாத்திரைகள் இனி அமெரிக்காவில் தடையின்றி கிடைக்கும்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பற்றி அதிபர் ஜோ பைடன் கூறுகையில், கீழ் நீதிமன்றத்தின் முடிவுகள், உணவு மற்றும் மருந்து கழகத்தின் மருத்துவ நடைமுறைகளை முடக்கி, பெண்களின் உரிமைகளை ஆபத்தில் தள்ளியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தடை உத்தரவால், மைப்பிரிஸ்டோன் மருந்துகள் தொடர்ந்து கிடைக்கும். பெண்களின் சுகாதாரத்தில் அரசியல் நோக்கோடு நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிரக நான் தொடர்ந்து போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications