புதிய உருமாறிய கொரோனாவை கண்டறிவது எப்படி? ஓமைக்ரான் பாதிப்பு எப்படி உருவானது? எந்தளவு ஆபத்தானது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் ஒப்பீட்டளவில் புதிய வைரஸ் என்பதால் அது குறித்த ஆய்வு உலகெங்கும் நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் இதைச் சமாளிப்பது கடினமான விஷயமாக மாறியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஆல்பா, பீட்டா, டெல்டா என பல்வேறு உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை எப்படிக் கண்டறியப்படுகின்றன என்பது குறித்துப் பார்க்கலாம்.

கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்தே தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜீனோமிக்ஸ் கண்காணிப்பு மையம் இந்க வைரசில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பு எப்படிப் பரவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வு பெரியளவில் உதவுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த மையம் தான் பீட்டா உருமாறிய கொரோனாவை முதலில் கண்டறிந்தது. இது குறித்து தென்னாப்பிரிக்காவின் சில முக்கிய ஆய்வாளர்கள் the conversation தளத்தில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்..

புதிய உருமாறிய கொரோனா

புதிய உருமாறிய கொரோனா

புதிய உருமாறிய கொரோனாவை கண்டறிய கடும் முயற்சி தேவை. தென்னாப்பிரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய 2 நாடுகள் மட்டுமே கடந்தாண்டு ஏப்ரல் மாதமே உருமாறிய கொரோனா வகையைக் கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு மரபணு வரிசைகளை ஆய்வு செய்வதன் மூலம் உருமாறிய கொரோனாவை கண்டறிய முடியும். உலகின் மற்ற பகுதிகளில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளுடன் இதை ஒப்பிட்டு புதிய உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்படும். எதில் அதிக மாறுபாடுகள் உள்ளனவோ, அது குறித்து ஆய்வு செய்து, உலக சுகாதார அமைப்புக்குத் தகவல் அளிக்கப்படும்.

ஓமைக்ரான் கொரோனா

ஓமைக்ரான் கொரோனா

இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ளத் தேவையான வசதிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள பல ஆய்வகங்களில் வைரஸ்களை வளர்க்கவும் ஆய்வு செய்யவும் முடியும். வேக்சின்கள் புதிய கொரோனா பாதிப்புக்கு எதிராக எந்தளவு செயல்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்ய முடியும். முதலில் பீட்டா கொரோனா பாதிப்பு இங்குக் கண்டறியப்பட்டது. அது தான் தென்னாப்பிரிக்காவில் 2ஆவது அலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தென்னாப்பிரிக்காவில் 3ஆவது அலையை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் புதிய உருமாறிய கொரோனா குறித்துக் கண்டறியப்பட்டது. 77 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங் நாடுகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏன் உருமாறுகிறது

ஏன் உருமாறுகிறது

உருமாறிய கொரோனா பாதிப்புகள் எப்படி உருவாகின்றன என்பதி குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்களால் கொரோனா வைரஸை அழிக்க முடிவதில்லை. இதனால் அவர்கள் உடலில் நீண்ட காலம் இருக்கும் கொரோனா, உருமாறத் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல ஆண்டுகளாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம். இதன் மூலமும் உருமாறிய கொரோனா ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

30க்கும் மேற்பட்ட மாறுபாடுகள்

30க்கும் மேற்பட்ட மாறுபாடுகள்

இந்த புதிய உருமாறிய கொரோனா ஆபத்தானதா என்பது குறித்து இப்போது நமக்குத் தெரியாது. இதில் உள்ள சில மாறுபாடுகள் கவலை கொள்ளச் செய்கிறது. அதில் மாற்றுக்கருத்தில்லை. இதுவரை கண்டறியப்பட்ட எந்த உருமாறிய கொரோனாவின் புரோத ஸ்பைக்கிலும் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் இருந்ததில்லை. புரோத ஸ்பைக்கை குறிவைத்தே பெரும்பாலான வேக்சின்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால் இது கவலை கொள்ளச் செய்கிறது.

முற்றிலும் மாறுபட்ட ஒன்று

முற்றிலும் மாறுபட்ட ஒன்று

தற்போது வரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகைகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே உள்ளது. இது பீட்டா அல்லது டெல்டா கொரோனாவின் மற்றொரு வகை இல்லை. இது புதிய வகை கொரோனா என்பதால் இது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது. இந்த வைரஸ் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகிறது. இது எந்தளவு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது, எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, வேக்சினில் இருந்து தப்பும் ஆற்றல் உள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்படுகிறது.

ஆய்வுகள்

ஆய்வுகள்

முதலில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் எந்தளவு வேகமாகப் பரவுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அடுத்து இது ஏற்கனவே வேக்சின் போட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே இந்த உருமாறிய கொரோனா குறித்து உறுதியாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் அந்த குறிப்பிட்ட பகுதியில் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் எங்கு அடுத்த அலை ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து உறுதியாக எதுவும் கூற முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின்

அதேபோல தற்போதுள்ள வேக்சின்கள் இந்த புதிய உருமாறிய கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யுமா, எந்தளவு வேலை செய்யும் என்பது குறித்தும் உறுதியாகச் சொல்ல முடியாது. வேக்சின் போட்டவர்களுக்கு மத்தியிலும் கூட இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வேக்சின்கள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில்லை என நமக்குத் தெரியும். அது தீவிர பாதிப்பையும் உயிரிழப்புகளையும் மட்டுமே குறைக்கிறது. எனவே இதிலும் உறுதியாக எதையும் கூற முடியாது. தற்போது வரை உலகிலுள்ள அனைவருக்கும் வேக்சின் செலுத்துவதே இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+