அமெரிக்காவில் 2-ல் ஒரு இந்தியர்.. நிறவெறி பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இரண்டில் ஒரு இந்தியர் நிறவெறி பாகுபாட்டை எதிர்கொள்வதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் நிறவெறி பாகுபாடு என்னும் கொடிய சாத்தான் நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறது. நிறவெறி காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இனவெறி, நிறவெறி, மதவெறி பாகுபாடு குறித்து அறிவதற்காக இந்திய அமெரிக்க மனப்பான்மை கணக்கெடுப்பு (ஐ.ஏ.ஏ.எஸ்) நடத்தப்பட்டது.

ஆன்லைன் மூலம் ஆய்வு
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட் ஆகியவற்றுடன் இணைந்த ஆராய்ச்சியாளர்களால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி இறுதி காலத்தில், கொரோனா முதல் அலை பாதிப்பு ஏற்பட்ட கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இந்த ஆய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

இரண்டில் ஒரு இந்தியர்
சுமார் 1,200 இந்திய வம்சாவளியினரிடம் நிறவெறி, இனவெறி, மதவெறி பாகுபாட்டை எதிர்கொண்டீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது மொத்தம் பதிலத்தவர்களில் இரண்டில் ஒருவர் கடந்த ஆண்டில் பாகுபாட்டை எதிர் கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதில் நிறவெறிதான் அதிகம். இந்தியன்-அமெரிக்கன்' என்ற சொல் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் இது போட்டியிடும் அடையாளமாக இருப்பதாகவும் ஆய்வு முடிவு கூறின,

நிறவெறி அதிகம்
தோல் நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு(நிறவெறி) காண்பது மிகவும் அதிகமாக(30%) இருந்துள்ளது. தோல் நிற அடிப்படையிலான பாகுபாட்டைத் தவிர, பல இந்திய அமெரிக்கர்கள் (18 சதவீதம்) தங்கள் பாலினம் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். முஸ்லிம்கள் அதிக அளவு மத பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர். முஸ்லிம்கள் (39 சதவீதம்), இந்துக்கள் (18 சதவீதம்), கிறிஸ்தவர்கள் (15 சதவீதம்) பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர்.

அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்
பதிலளித்தவர்கள் பலர் இந்திய பாரம்பரியம் காரணமாக பாகுபாடு காட்டப்பட்டதாகவும், 5 சதவீதம் பேர் சாதி அடையாளம் காரணமாக பாகுபாடு எதிர்கொண்டதாகவும் தெரிவித்தனர். இதில் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக அமெரிக்காவில் பிறந்த இந்திய அமெரிக்கர்கள் இந்தியாவில் அல்லது வேறு எந்த நாட்டிலும் பிறந்த இந்தியர்களை விட அதிக பாகுபாட்டை எதிர் கொண்டுள்ளனர் என்பதுதான். கிரீன் கார்டு, எச் 1 பி விசா வைத்திருப்பவர்கள், மாணவர்கள் போன்றவர்கள் உள்ளிட்ட இந்திய அமெரிக்கர்களிடமிருந்து பதில்கள் பெறப்பட்டுள்ளன. பதிலளித்தவர்களில் 77 சதவீதம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications