அமெரிக்க சட்டத்தில் பெரிய ஓட்டை.. "குற்றவாளி" ஆன பிறகும் டிரம்பால் அதிபராக முடியும்.! அது எப்படி
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இப்போது பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்கிறது. இருப்பினும், என்ன நடந்தாலும் அவர் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 2020இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற பின்னரும் அவர் அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றதாகப் புகார் எழுந்தது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜரான டிரம்ப், தான் குற்றமற்றவர் என்று வாதாடினார்.

அதேநேரம் டிரம்ப் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சிக்குவது ஒன்றும் இது முதல்முறை இல்லை. அவர் அதிபர் பதவியை இழந்தது முதலே தொடர்ச்சியாக பல சிக்கல்களை எதிர்கொண்டே வருகிறார். அதில் இருந்து தப்பித்து வருகிறார். இருப்பினும், டிரம்ப் எவ்வளவு காலம் இதில் இருந்து எஸ்கேப் ஆவார் என்பது தெரியவில்லை.
டிரம்ப்: ஏனென்றால் இந்த வழக்கிலேயே அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் அவர் தொடர்ச்சியாகப் பொய்யான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், டிரம்ப் தெரிந்தே பொய்யான தகவல்களைச் சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதில் குற்றவாளி என டிரம்ப் அறிவிக்கப்பட்டால் அவர் கைதாவார். அப்படி கைதானால் என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம்.
அமெரிக்கா பார்த்ததிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய அதிபராக டிரம்ப் இருக்கிறார். டிரம்ப் அதிபராக இருக்கும் போதே சர்ச்சைகளில் சிக்கியவர். அவர் அதிபராக இருந்த போதே அவர் மீது இரண்டு பதவிநீக்க மசோதா கொண்டு வரப்பட்டது. மேலும், அதிபர் ஆவணங்களைக் கவனக்குறைவாகக் கையாளுதல் உட்பட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதிபர் பதவியை இழந்த பிறகும் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் டிரம்ப் மீது பாலியல் பலாத்கார புகாரை முன்வைத்தார்.
கட்சியின் நிலைப்பாடு: இப்படி புகார்கள் குவிந்து வருகிறது. இருப்பினும், குடியரசு கட்சியினர் பழமை வாதிகள் மத்தியில் டிரம்பிற்கான ஆதரவு அதிகரித்தே வருகிறது. அவர் ஏற்கனவே 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். குடியரசு கட்சி சார்பில் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்தாலும் கூட டிரம்பிற்கே ஆதரவு அமோகமாக இருக்கிறது. எனவே, அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம்.
குடியரசு கட்சியினருக்கும் டிரம்பை விட்டால் வழியில்லை. பொதுமக்கள் மத்தியில் டிரம்ப் அளவுக்கு மற்ற தலைவர்களுக்கு வரவேற்பு இல்லை. அதேநேரம் இப்போது நடக்கும் முக்கிய அதிபர் தேர்தலில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டால் அவருக்கு என்ன நடக்கும்., அவர் தேர்தலில் போட்டியிடலாமா என்பது உங்களுக்கு ஒரு சந்தேகமாக இருக்கும்.
அமெரிக்கச் சட்டம்: அமெரிக்க சட்டப்படி ஜெயலில் இருக்கும் எந்தவொரு நபரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று எந்தவொரு சட்டமும் இல்லை. எனவே, அவர் சிறையில் இருந்தாலும் கூட குடியரசு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்புகள் இருக்கிறது.. அதாவது குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபரும் சிறை தண்டனையை அனுபவிக்கும் போதே தேர்தலில் போட்டியிடலாம்.

அந்தளவுக்கு அமெரிக்கச் சட்ட அமைப்பு மிகவும் பலவீனமாக உள்ளது, அதேநேரம் கோர்ட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். டிரம்ப் தான் பொய் சொல்லவில்லை.. அதாவது தெரிந்தே பொய் சொல்லவில்லை.. தான் உண்மை என நம்பியதை மட்டுமே சொன்னதாகக் கூறலாம். தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதைத் தான் நம்பியதாகவும் அதையே தான் கூறியதாகச் சொல்லலாம். இது பேச்சுரிமையின் கீழ் வரும் என வாதாடலாம்.
நீதிமன்ற முடிவு: இருப்பினும், இறுதி முடிவை நீதிமன்றமே எடுக்கும். அவருக்குச் சிறைக்குச் செல்வதிலும் பாசிட்டிவ் நெகடிவ் என இரண்டும் இருக்கிறது. நெகடிவ் என்னவென்றால் அமெரிக்கத் தேர்தலில் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று பிரசாரம் செய்ய வேண்டியது ரொம்பவே முக்கியம். இதுதான் ஒருவரது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். டிரம்ப் ஜெயிலில் இருந்தால் இதை அவரால் செய்ய முடியாது.
அதேநேரம் அமெரிக்காவை மாபெரும் தேசமாக்க முயன்றதாகவே தன்னை சிறையில் தள்ளிவிட்டார்கள் என்று அவர் சொல்லி வாக்கு கேட்கலாம். இது டிரம்பிற்கு அனுதாப அலையையும் ஏற்படுத்தும். இது டிரம்பிற்கு ஆதரவாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. இதில் என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications