போதும்பா.. போதும்.. ஓய்வை அறிவித்தார் பிரபல தொழிலதிபர் வாரன் பஃபெட்.. பின்னணி
வாஷிங்டன்: 'பங்குச் சந்தை பிதாமகன்' என அழைக்கப்படும் பிரபல தொழிலதிபர் வாரன் பஃபெட், 'பெர்க்ஷ்யர் ஹாத்வே' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து இன்று அதிகாரப்பூர்வமாக விலகுகிறார். இதற்கான ஓய்வை அவர் அறிவித்துள்ளார். நஷ்டத்தில் இருந்த ‛பெர்க்ஷியர் ஹாத்வே' நிறுவனத்தை மீட்டு கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர் தான் வாரன் பஃபெட். இவர் இன்று ஓய்வு பெறும் நிலையில் புதிய சிஇஓ யார்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் ஏராளமான தொழிலதிபர்கள் உள்ளனர். ஆனால் சில தொழிலதிபர்கள் மட்டும் தான் நாடுகளை கடந்து புகழ்பெறுவார்கள். அந்த வகையில் ஒருவர் தான் ‛வாரன் பஃபெட்'. இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். உலகம் முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் ‛பெர்க்ஷியர் ஹேத்வே' நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறார்.
அமெரிக்காவை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ‛பெர்க்ஷயர் ஹேத்வே'. முதலில் ஜவுளி தொழிலை இந்த நிறுவனம் மேற்கொண்டது. பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டது. இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக வாரன் பஃபெட் மற்றும் துணை தலைவராக சார்லி மங்கர் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

அதாவது பெர்க்ஷியர் ஹேத்வே நிறுவனத்தின் பங்குகளை 1962ம் ஆண்டில் வாங்கினார். ஒரு பங்கை 7.60 டாலர் என்ற மதிப்பீட்டில் வாங்கினார். அப்போது ஜவுளி விற்பனையில் ஈடுபட்டு நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில் மெல்ல மெல்ல மீள தொடங்கியது. அதன்பிறகு காப்பீடு, ரெயில் ரோடு, எனர்ஜி, வாடிக்கையாளர்களுக்கு தேவையான பிற பிராண்டுகள் என்று தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்தது.
இன்று, பெர்க்ஷயர் நிறுவனத்தின் பங்குகள் 750,000 டாலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்த வெற்றிக்கு வாரன் பஃபெட் தான் முக்கிய காரணமாகும். குறிப்பாக பங்கு சந்தை முதலீட்டில் கொடி கட்டி பறக்க தொடங்கியது. ‛பங்கு சந்தையின் பிதாமகன்' என்ற புனைப்பெயரை வாரன் பஃபெட் பெற்றார்.
தற்போது இந்த நிறுவனத்தின் மொத்தம் மதிப்பு 900 பில்லியன் அமெரிக்க டாலர் என கூறப்படுகிறது. உலகளவில் முக்கிய நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. கடந்த 60 ஆண்டு வரலாற்றில் வாரன் பஃபெட் இன்றி நாளை முதல் இந்த நிறுவனம் இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் தற்போது அவர் ‛பெர்க்ஷியர் ஹேத்வே' நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று தான் அவரது கடைசி நாளாகும். வாரன் பஃபெட்டுக்கு தற்பாது 96 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக அவர் ஓய்வை அறிவித்துள்ளார். நாளை முதல் அவர் சிஇஓ கிடையாது.
இதையடுத்து நிறுவனத்தின் புதிய சிஇஓவாக கிரேக் ஏபெல் பொறுப்பேற்க உள்ளார். இவர் தற்போது வாரன் பஃபெட் உடன் நிறுவனத்தின் துணை தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் தான் அடுத்த சிஇஓவாக நாளை முதல் செயல்பட உள்ளார். இவர் நாளை சிஇஓவாக பொறுப்பேற்க உள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளாக முதலீட்டு உலகில் பெரிதும் மதிக்கப்படும் 95 வயதான வாரன் பஃபெட், நிர்வாக பொறுப்பில் இருந்து பதவி விலகினாலும், செயல் சாரா தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications