கிரீன் கார்டை சரண்டர் செய்ய பிரஷர்.. டிரம்பால் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு சிக்கல்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருப்போர் மற்றும் ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் வெளிநாட்டினரும் கூட கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். உண்மையில் அங்கு என்ன பிரச்சினை நிலவுகிறது.. டிரம்ப் நிர்வாகம் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கிறது.. இது குறித்து அங்குள்ள வல்லுநர்கள் சொல்வது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்காவுக்கே முன்னுரிமை எனச் சொல்லி ஆட்சியைப் பிடித்துள்ள டிரம்ப், அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அவர்களை நாடுகடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

Donald Trump America India

சிக்கல்

இதற்கிடையே இப்போது அங்கு சட்டப்பூர்வமாக வசிப்போருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலும் கிரீன் கார்டு வைத்திருப்போர் மற்றும் ஹெச்- 1பி விசா வைத்திருப்போர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் மீண்டும் அமெரிக்கா திரும்பும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. பெரும்பாலும் இந்தியர்களே கிரீன் கார்டு மற்றும் ஹெச்- 1பி விசா அதிகம் வைத்திருக்கும் நிலையில், இது அவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

வல்லுநர்கள் சொல்வது என்ன

இது தொடர்பாக நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நரேஷ் கெஹி கூறுகையில், "அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள். நீதிமன்றத்திற்குப் போக வேண்டியதை இவர்களே கையாள்கிறார்கள். நீதித்துறையைப் புறக்கணித்து இவர்களே அந்த வேலையையும் பார்க்கிறார்கள்.. கிரீன் கார்டுகள் வைத்திருக்கும் பல இந்தியர்கள் தேவையற்ற சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது" என்றார்.

டிரம்ப் ஆதரவாளர்கள்

இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தேசியப் பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பை உறுதி செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். முந்தைய அரசுகள் அமல்படுத்தத் தவறிய குடியேற்றச் சட்டங்களை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்துகிறது என்றும் சட்டங்களை மீறுவோர் கைது செய்யப்பட்டு, தேவையென்றால் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.

அழுத்தம் இருக்கு

என்னதான் சட்டத்தை மீறவில்லை என்று டிரம்ப் ஆதரவாளர்கள் கூறினாலும் பல இடங்களில் கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு அழுத்தம் தரப்படுவதாகவே கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிரீன் கார்டு வைத்திருப்போர் வெளிநாட்டில் இருந்துவிட்டு திரும்பும்போது அவர்களுக்கு அழுத்தம் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. கிரீன் கார்டை சரண்டர் செய்யும்படி அதிகாரிகள் வலியுறுத்துகிறார்களாம். கடந்த சில வாரங்களில் வயதான இந்தியர்களுக்கு இதுபோல நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தப்பிப்பது எப்படி

அமெரிக்கச் சட்டத்தின்படி கிரீன் கார்டு வைத்திருக்கும் ஒருவர் தானாக முன்வந்து அதை சரண்டர் செய்ய விரும்பினால் Form I-407ஐ நிரப்பித் தர வேண்டும். ஆனால், வெளிநாடுகளில் இருந்து திரும்பும் கிரீன் கார்டு ஹோல்டர்களையும் இதில் கையெழுத்துப் போடச் சொல்லி கிரீன் கார்டை ஒப்படைக்க அதிகாரிகள் அழுத்தம் தருவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+