இது எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா.. "அவர்"தான்.. ஆப்கன் விவகாரத்தில் ஒரே போடாக போட்ட டிரம்ப்
ஆப்கன் விவகாரம் குறித்து ஜோ பிடன் மீது டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார்
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இப்போது நிலவுகின்ற எல்லா பிரச்னைகளுக்கும் காரணமே அமெரிக்க அதிபர் ஜோ பிடன்தான் என்று முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
கடந்த 2 நாட்களாகவே உலக அரசியல் பரபரப்பில் நகர்ந்து வருகிறது.. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகள் வெளியேறியதில் இருந்தே தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது... இப்போது மொத்தமாகவே கைப்பற்றிவிட்டனர்.
நேற்றைய தினம் காபூல் நகருக்குள் சென்ற தலிபான்கள், நகரையே முழுமையாக சுற்றி வளைத்தனர்.. பிறகு, ஆட்சி அதிகாரத்தை தங்களிடம் வழங்கும்படி கேட்டார்கள்.. அதற்குள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது அமைச்சர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் நாட்டிற்கு சென்றுவிட்டார்..

உரிமைகள்
இதனிடையே, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற அந்நாட்டு மக்கள் முயன்று வருகிறார்கள்.. எங்கே தங்களுடைய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடுமோ என்று கலக்கத்தில், அந்நாட்டு மக்கள் காபூல் ஏர்போர்ட்டில் குவிந்து வருகின்றனர்.. ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும், எங்களது ஆட்சி அமையப் போகிறது, யாருக்கும் எந்த ஆபத்தும் எங்களால் ஏற்படாது என்று தாலிபன்கள் உறுதி தந்து வந்தாலும்கூட அதை யாரும் நம்ப தயாராக இல்லை.. பீதி நிறைந்த நடுக்கத்துடன், நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

டொனால்டு டிரம்ப்
இந்நிலையில் இது தொடர்பாக, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.. அதில், ஆப்கானிஸ்தானில் இப்போது நிலவுகின்ற எல்லா பிரச்னைகளுக்கும் காரணமே அமெரிக்க அதிபர் ஜோ பிடன்தான், அவர்தான் முழு முதற் காரணம்.. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்தவரை அங்கே நல்லாதான் இருந்தது.. அமைதி நிலவியது.. ஆனால், அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என்று ஜோபிடன் சொன்னதுமே, அங்கே நிலைமை தலைகீழாகிவிட்டது.

தோல்வி
ஆப்கானிஸ்தானுக்கு ஜோபிடன் செய்ததை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது... இது அமெரிக்காவின் வரலாற்று தோல்வி... காலத்துக்கும் இந்த பேச்சு இருக்கும்.. அதனால இதுக்கெல்லாம் பொறுப்பேற்று அமெரிக்க அதிபர் பதவியை பிடன் ராஜினாமா செய்ய வேண்டும்... அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் தொற்று மறுபடியும் அதிகரிப்பதற்கு காரணமும் இதே பிடன் அரசின் செயல்பாடுதான் காரணம்" என்றார்.

ஒப்பந்தம்
டிரம்ப் இப்படி மொத்த பழியையும் பிடன்மீது சுமத்தி விட்டாலும், அது உண்மையல்ல என்பதே பரவலான கருத்து.. காரணம், தோஹா ஒப்பந்தப்படி தாலிபான்களை அங்கீகரித்து, ஆகஸ்ட் 31-ம்தேதி படைகளை வாபஸ் வாங்குவதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டது.. அப்படி ஒரு ஒப்பந்தத்தை போட்டதே ட்ரம்ப் அரசுதான்... ஆனால் அதை டிரம்ப் மறந்து விட்டார்.. மறைத்தும் பேசுகிறார்.

குற்றச்சாட்டு
இது முதல்முறையில்லை.. கடந்த வாரம்கூட தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் முன்னேறி சென்றபோது, டிரம்ப் ஒரு விமர்சனம் வைத்திருந்தார்.. அதில்கூட இப்படித்தான், அதிபர் பிடனை தாக்கி பேசினார்.. "அவசர அவசரமாக பிடன் படைகளை வாபஸ் வாங்கிவிட்டார்.. ஆகஸ்ட் 31ம் தேதிதான் படைகளை வாபஸ் வாங்க வேண்டும்... ஆனால் அதுக்கு முன்னாடியே மொத்தமாக படைகளை வாபஸ் வாங்கிவிட்டார்..

வாபஸ்
எல்லாம் முடிந்துவிட்டது. நான் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்க விட்டிருப்பேனா.. நானிருந்தால் அது நடந்தே இருக்காது... படைகளை இன்னும் வெற்றிகரமாக, பாதுகாப்பான முறையில் வாபஸ் வாங்கியிருப்பேன்.. அப்படியே வாபஸ் வாங்கினாலும், கன்டிஷன் போடாமல், படைகளை வாபஸ் வாங்கியிருக்க மாட்டேன்... அவ்வளவு ஏன், நானே நேரடியாக தாலிபான் தலைவர்களிடம் பேசி விஷயத்தை முடித்திருப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.
Recommended Video

தாலிபான்கள்
ஆனால், டிரம்ப் கடந்த காலங்களில் எடுத்த முயற்சிகளே இன்றைய பிடன் செயல்பாடுகளுக்கு அடித்தளமாகி உள்ளது.. தாலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் உள்நாட்டு போர் தொடர்ந்து நடந்து வந்தாலும், தோஹாவில் கடந்த 2020ல் பேச்சுவார்த்தை நடந்தது... முதலில் போடப்பட்ட ஒப்பந்தப்படி, மே 1ம் தேதி 2021க்குள் படைகளை வாபஸ் வாங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.. ஆனால், அதற்கு பிறகு அதிபர் ஜோ பிடன், இதே தேதியை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்... பிறகு, மறுபடியும் ஆகஸ்ட் 31ம் தேதியே படைகளை வாபஸ் வாங்கி விடுவோம் என்றும் அறிவித்தார்.

விமர்சனம்
இதற்கு பதிலாக, தாலிபான்கள் அமெரிக்கா மீதோ அதன் நட்பு நாடுகள் மீதோ தாக்குதல் நடத்த கூடாது என்றும் அல் கொய்தா தீவிரவாத அமைப்புகளை தாலிபான்கள் ஆதரிக்க கூடாது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.. ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தாலிபான்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் தாலிபான்களோ, ஒப்பந்தத்தை மதிக்காமல் தற்போது நாட்டையே கைப்பற்றி விட்டனர்.. ஆக, மூலக்காரணம் ஜோபிடன் இல்லை என்பதே இதன் சாராம்சம்..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications