வழிக்கு வந்த டிரம்ப்.. மம்தானி வெற்றியால் கலக்கம்! நிதி விவகாரத்தில் முடிவை திரும்ப பெற்றார்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நியூயார்க் மேயர் தேர்தலில், மம்தானியை வெற்றி பெற செய்தால், நியூயார்க் நகரத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவேன் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கையையும் மீறி மம்தானியை மக்கள் வெற்றி பெற செய்தனர். இந்நிலையில், நிதி வழங்கும் விஷயத்தில் நான் திறந்த மனதுடன் செயல்படுவேன் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், "கம்யூனிஸ்ட், மார்க்சிச சோசலிஸ்டுகள் மற்றும் உலகமயமாக்கவாதிகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்கள் பேரழிவைத் தவிர வேறு எதையும் வழங்கவில்லை. இப்போது நியூயார்க்கில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கம்யூனிஸ்ட் எப்படி செயல்படுகிறார் என்று பார்ப்போம். நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். நியூயார்க் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

us donald trump

நியூயார்க் நகரம் அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்கார நகரமாகும். ஆனால் இந்த நகரத்தை உருவாக்கிய மக்களுக்கு அங்கு இடமில்லாமல் இருக்கிறது. குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் வாடகை உயர்வு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நான் மேயராக தேர்வானால் இதையெல்லாம் சரி செய்வேன் என்று மம்தானி வாக்குறுதி கொடுத்திருந்தார். இதனையடுத்து மக்கள் மம்தானியை வெற்றி பெற செய்திருக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் டிரம்ப் கட்சியின் வேட்பாளர் படுதோல்வியடைந்தார் என்பதுதான்.

மொத்தம் மூன்று பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட மம்தானி 50.5% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சயாக களமிறங்கிய ஆண்ட்ரூ கியூமோ 41.4% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். டிரம்ப் கட்சியை சேர்ந்த கர்டிஸ் ஸ்லிவா வெறும் 7.2 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார். டிரம்ப் இவ்வளவு மிரட்டியும் கூட ஜனநாய கட்சியின் வேட்பாளர் படுதோல்வியடைந்திருப்பது அவருக்கு தனிப்பட்ட முறையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி இருக்கையில் நிதி விஷயத்தில் டிரம்ப் பேக் அடித்திருக்கிறார். அமெரிக்க பெடரல் அரசு (மத்திய அரசு) ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட அளவுக்கு நிதியை ஒதுக்க வேண்டும். 8-10 பில்லியன் டாலர் என்பது சட்டப்பூர்வ குறைந்தபட்ச நிதி. ஆனால் நியூயார்க் நகரத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை டிரம்ப் ஒதுக்கியிருந்தார். இனி அப்படி ஒதுக்க முடியாது என்று சொன்ன டிரம்ப் தற்போது தனது முடிவை திரும்ப பெற்றிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+