டிரம்ப்க்கு செக் வைத்த அமெரிக்கா உச்சநீதிமன்றம்.. எந்தெந்த வரிகள் ரத்து?
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பல்வேறு அதிர்ச்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டார். குடியேற்ற கொள்கை திருத்தம், மானியங்கள் ரத்து உள்ளிட்டவற்றை செயல்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் ரெசிப்ரோக்கல் வரியை டிரம்ப் கையில் எடுத்த போது, உலக நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. தங்களின் பேச்சை கேட்காத நாடுகள் மீது உச்சக்கட்ட வரியை விதிக்க தொடங்கினார்.
இதனால் இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு கூடுதல் வரியை விதிப்பதாக அறிவித்தார். இந்த வரிகளை விதிப்பதற்கு டொமால்டு டிரம்ப், சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977ஐ பயன்படுத்தினார்.

அமெரிக்காவின் வருவாயை அதிகரிக்கவும், வர்த்தக பேச்சுவார்த்தையில் மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் ந்த வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார். இதற்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் டிரம்ப் நடவடிக்கை எதிராக பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடினர்.
டிரம்ப் நடவடிக்கைகளால் இறக்குமதி பொருட்களை நம்பியுள்ள வணிக நிறுவனங்களின் செயல்பாடுகள் சீர்குலைந்து, விலையேற்றம் மற்றும் பணி நீக்க நடவடிக்கைகளுக்கு வழிவகுத்ததாக வாதிடப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா உச்சநீதிமன்றம், டிரம்ப் விதித்த வரி விதிப்புகள் செல்லாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977 சட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் தனிப்பட்ட முறையில் வரியை விதிக்க எந்தவித உரிமையும் இல்லை. அவசர நிலை என்ற பெயரில் அரசியலைப்பின் அதிகாரத்தை மீற முடியாது. போர் அச்சம், அமெரிக்கா பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே இத்தகைய வரி அமெரிக்க அரசால் விதிக்க முடியும்.
அமெரிக்கா ஒன்றும் 100க்கும் அதிகமான நாடுகளுடன் போரில் இல்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி இந்த ரெசிப்ரோக்கல் வரியை விதித்துள்ளார் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக, சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977 கீழ் விதித்த வரிகள் செல்லாது என்று பார்க்கப்படுகிறது.
ஆனால் டொனால்டு டிரம்ப் மற்ற விதிகளை பயன்படுத்தியும் சில வரிகளை விதித்திருக்கிறார். வர்த்தக விரிவாக்க சட்டம் 1962 பிரிவு 232ஐ பயன்படுத்தி பல்வேறு வரிகளை விதித்திருக்கிறார். எஃகு மற்றும் அலுமினியம், கார்கள், தாமிரம், சமையலறை அலமாரிகள், குளியலறை சாதனங்கள், மெத்தைகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த வதியை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications