கோவிட் 19 விசாரணை.. நிபுணர்கள் குழுவை சீனாவுக்கு அனுப்ப தயார்.. ஆனால் அழைக்கவில்லையே.. டிரம்ப் கோபம்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்த நிபுணர்கள் குழுவை சீனாவுக்கு அனுப்ப விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
சீனாவின் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் வேண்டுமென்றே ஏவி விடப்பட்டுவிட்டதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து சீனா விசாரணை நடத்தி வரும் நிலையில் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து லீக்கானதா என்பது குறித்து டிரம்பும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

அழைக்கவில்லை
அப்போது அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் என்பது கொள்ளை நோய். சீனாவுக்கு நிபுணர்கள் குழுவை அனுப்பி விசாரணை நடத்துகிறோம் என நீண்ட நாட்களாக கேட்டு வருகிறோம். அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். நாங்கள் கேட்டும் எங்களை அவர்கள் அழைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகிழ்ச்சி
சீனாவுடனான வர்த்தகத்தின் போது நான் மகிழ்ச்சியாக இருந்தேன். எல்லா விஷயங்களிலும் மகிழ்ச்சி நிலவியது. கொள்ளை நோய் குறித்து எப்போது கண்டறிந்தோமோ அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கிடையேயான உறவில் சுமூகம் இல்லை. கொரோனா வைரஸை சீனா கையாண்ட விதம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

ஆரம்ப கட்ட ஒத்துழைப்பு
வெளிப்படைத்தன்மை, ஆரம்ப கட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றை சீன அரசு செய்யவில்லை. விசாரணை அடிப்படையில் நாம் கண்டுப்பிடிக்க போகிறோம் என்றார் டிரம்ப். நேற்று முன் தினம் அவர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் போது கொரோனா வைரஸை சீனா வேண்டுமென்றே பரப்பிவிட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கொரோனா வைரஸ்
அதற்கு பதிலளித்த டிரம்ப், கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சீனாவில் வைரஸ் குறித்த ஆராய்ச்சின்போது தெரியாமல் தவறுதலாக பரவியிருந்தால் ஏதோ தவறு நடந்துவிட்டது என்பதாக இருக்கும். ஒரு வேளை அவர்களுக்கு தெரிந்தே அந்த வைரஸ் வெளியேறியிருந்தால் கடும் விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications