முதல் நாளே 20 பொய்! அடித்துவிட்ட டிரம்ப்! வெளிச்சம்போட்டு காட்டிய அமெரிக்க ஊடகங்கள்! மாட்டிக்கிட்டாரே
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் நேற்று பதவியேற்ற நிலையில், இரண்டு இடங்களில் அவர் உரையாற்றினார். அப்போது பல உண்மைக்கு மாறான தகவல்களை அவர் சொன்னதாக கூற்பபடுகிறது. குறிப்பாக முதல் நாளே அவரது பேச்சில் 20 உண்மைக்கு மாறான தகவல்கள் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்ற டிரம்ப், நேற்றைய தினம் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். மேலும், அவர் நேற்று இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார்.

அதிபர் டிரம்ப்:
முதலில் அவர் அதிபராக பதவியேற்ற உடனே கேபிடல் ரோட்டுண்டாவில் உரையாற்றினார். இங்கு அவரது பேச்சு முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்தே அவர் தனது உரையை வாசித்தார். அடுத்து எமன்சிபேஷன் ஹாலில் அவரது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். இந்த உரைக்கு முன்கூட்டியே ஸ்கிரிப்ட் எதுவும் தயாரிக்கப்படவில்லை.
ஆனால், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பேச்சு, தயாரிக்கப்படாத பேச்சு என இந்த இரண்டிலுமே ஏகப்பட்ட உண்மைக்கு மாறான தகவல்கள் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக நேற்று மட்டும் அவரது உரையில் சுமார் 20 உண்மைக்கு மாறான தகவல்கள் இருந்ததாக அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பொருளாதாரம், குடியேற்றம், வெளியுறவு துறை, மின்சார வாகனங்கள், 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகியவை குறித்து அவர் சொன்ன தகவல்கள் உண்மைக்கு மாறாக இருந்ததாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேக்ட் செக்:
டிரம்ப் இதற்கு முன்பு அதிபராக இருந்த போதே பல முறை உண்மைக்கு மாறான தகவல்களை கூறி வந்தார். அப்போதே அமெரிக்க ஊடகங்கள் அவரது பேச்சை ஃபேக்ட் செக் செய்து வந்தது. அப்போது டிரம்பின் ஒவ்வொரு பேச்சுக்கு பிறகும் ஃபேக்ட் செக் செய்து அவர் எத்தனை உண்மைக்கு மாறான தகவல்களை சொன்னார் என்பது குறித்து செய்தி வெளியிடும். இது அப்போது ஒரு டிரெண்டாகவே இருந்தது.
முதல் நாளே 20 பொய்:
டிரம்ப் 2017இல் அதிபராக பதவியேற்ற போது முதல் 100 நாட்களில் 492 உண்மைக்கு மாறான தகவல்களை கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் கூறியிருந்தது. 2017-2021 காலகட்டத்தில் அவர் மொத்தம் 30,573 பொய்களை கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே இன்று முதல் நாளே டிரம்ப் 20 உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார். கடந்த முறையை காட்டிலும் டிரம்ப் இந்த முறை அதிக பொய்களை சொல்வாரா இல்லையா என்பதில் அங்கு ஒரு விவாதமே நடந்து வருகிறது.
பணவீக்கம்:
தெற்கு எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயல்வோரை அமெரிக்க அதிகாரிகள் பிடித்து, சில மணி நேரத்தில் விடுவித்துவிடுவதாக கூறியிறியிருந்தார். இது உண்மைக்கு மாறான தகவல் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது. அதேபோல அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் இப்போது உச்சத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அமெரிக்காவில் கடந்த 2022இல் தான் பணவீக்கம் 9.1%ஆக உச்சத்தில் இருந்தது. இப்போது வெறும் 2.9%ஆகவே பணவீக்கம் உள்ளது. மேலும், அந்த 9.1% கூட வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகம் இல்லை. கடந்த 1920ம் ஆண்டு அமெரிக்காவில் பணவீக்கம் 23.7%ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பனாமா கால்வாய்:
மேலும், பனாமா கால்வாயை பயன்படுத்தும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக கட்டணம் சூலிக்கப்படுவதாகவும் சீனா தான் பனாமா கால்வாயை நிர்வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பனாமா கால்வாய் கட்டுமானத்தில் 39 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், கட்டுமானத்தின் போது 5,600 பேர் உயிரிழன்ததாக அமெரிக்க அரசு தகவல்கள் கூறுகிறது.
அங்குள்ள துறைமுக செயல்பாடுகளை ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனம் நிர்வகித்தாலும் பனாமா கால்வையை சீனா கட்டுப்படுத்தவில்லை. மேலும், எல்லா கப்பல்களுக்கும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறதே தவிர அமெரிக்க கப்பல்களுக்கு மட்டும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை.
இது தவிர மின்சார வாகனங்கள், 2020 அதிபர் தேர்தல் மோசடி, சீனா மீதான வரி, ஐரோப்பியா உடனான வர்த்தகம், அகதிகள் அந்தஸ்து வழங்குவது, இறக்குமதி வரி வருவாய், காலநிலை நெருக்கடி ஆகியவை குறித்தும் டிரம்ப் கூறியது உண்மைக்கு மாறான தகவல் என்றே அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications